ஒரு முன் குறிப்பு;
கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் [பெயர் சுட்ட விரும்பவில்லை] ஒரு அனைத்துக் கல்லூரிக்கலை விழா நடந்து கொண்டிருந்தபோது மின் இணைப்பைத் துண்டித்து விட்டுப் பல மாணவியரைக் கூட்டம் கூட்டமாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கின சில சமூக விரோத சக்திகள்.அதன் பிறகு பலப்பல ஆண்டுகள் அந்தக்குறிப்பிட்ட கல்லூரி மாணவி என்றால் அவளுக்குக் கல்யாணம் நடப்பதே கேள்விக்குறியாயிற்று. அப்போது எழுதப்பட்ட ஒரு சிறுகதை இது[1999] . நம் சமூகத்தின் நிலையில் இன்றுவரை மாற்றம் அதிகமில்லை என்பதையே இன்றைய நடப்பியல் நிகழ்வுகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன]
அறைக்கதவை மிக மெள்ள யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது.என்னையும் அறியாமல் அழுத்திய அசதியால் உறக்கத்தின் பிடியில் அமிழத்தொடங்கியிருந்த நான் எழுந்து வந்து கதவைத் திறக்கிறேன்.சூடான பானம் ஒன்றை ஏந்தியபடி குட்டித் தம்பி அருண் நிற்கிறான்.

‘’அனுக்கா இந்தா பிடி..!
ம்… ! டக்குன்னு கதவைச் சாத்திக்க’’
-மூச்சிறைக்கப் பேசியபடி
பேயைக் கண்டது போல ஓடும் அவன் கண்களில் இந்த மிரட்சி எப்படித்தான் வந்து புகுந்து கொண்டது? பள்ளிக்கூடம்
விட்டு வந்ததும் அம்மாவைக்கூடப் புறந்தள்ளி விட்டு ’அக்கா’என்று பாய்ந்து வந்து கட்டிக்
கொள்ளும் அருண்! அக்காதான் தலை சீவணும்’என்று அடம்பிடிக்கும் அருண்! கபடமற்ற அவன் கண்களிலும்
கூடக்கள்ளத்தைக் காணுகையில் என் உயிர் ஒரு கணம் ஓய்ந்து போகிறது.