துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
நூல்வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல்வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.7.11

கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்(தேவந்தி நூலின் அணிந்துரை )

(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் பாவண்ணன் எழுதியுள்ள அணிந்துரை..)
பாவண்ணன்
’’இச்சமூகத்தால் நிராசைக்குட்படுத்தப்பட்ட, நிலைகுலைய வைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பெண்களின் படிமமாக விளங்குகிறாள் தேவந்தி. இப்படிமத்தைக் கண்டெடுத்தது சுசிலாவின் மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்’’-பாவண்ணன்

கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்
குடும்ப வாழ்க்கையைப்பற்றி என் மனம் வரைந்துவைத்திருக்கிற சித்திரம் மிக உயர்வானது.  என் கல்லூரிக்காலத்தில் அது இன்னும் உயர்வானதாக, லட்சியபூர்வமானதாகவும் இருந்தது. 

26.7.11

கட்டியம்


(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பிற்கு  வடக்கு வாசல் இலக்கிய இதழின் ஆசிரியர் திரு யதார்த்தா கி.பென்னேஸ்வரன் அவர்கள் எழுதிய பதிப்புரை)

கட்டியம்
சுசீலாம்மா என்று இங்கு எங்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.ஏ.சுசீலா, தன்னை முனைவர் என்று அழைக்கப்படுவதையும் ஓய்வு பெற்ற பேராசிரியர் என்று விளிப்பதையும் அறவே தவிர்க்க விழைபவர்.   தலைநகர் வாழ்க்கையில் அவருக்குக் கிட்டும் மிகக் குறைந்த அவகாசத்தில்,  தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்கள், யோகக் கலை, தியானம், தீவிர வாசிப்பு, வலைத்தளத்தில் எழுதுதல் எனப் பல்வேறு பணிகளில் தீவிரத்துடன் இயங்கி வருகின்றவர்.  நம்மை அயரவைக்கும் உழைப்பு அவருடையது.

25.7.11

மொழியெனும் தேவதை(என்னுரை)


(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் என்னுரை)
மொழியெனும் தேவதை


சிறுவயது முதல் என்னை வசீகரித்த ஒரு வடிவம், சிறுகதை .
.
ஏதாவது ஒரு கதைப் புத்தகத்தை வாசித்தபடியே நகர்ந்த நாட்களும்,  குழந்தைத்தனம் மாறாத பேதமையுடன் கதை எழுதப் போவதாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு , வீட்டின் ஏதோ ஒரு மூலையில் பதுங்கியபடி புத்தம் புதிய டைரிகளின் பக்கங்களில் எதையாவது கிறுக்கிக் கொண்டிருந்த தருணங்களும் மட்டுமே பாலிய பருவத்தின் நினைவுகளாக என்னுள் பசுமையாகப் பதிந்திருப்பவை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....