துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.2.09

திருப்பூர் கலை இலக்கியப்பேரவை விருது

திருப்பூர் கலைஇலக்கியப்பேரவை, 2008ஆம் ஆண்டில் வெளியான தமிழ்நூல்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. அப்பட்டியலில் நான் மொழியாக்கம் செய்து, மதுரை பாரதி புத்தகநிலைய வெளியீடாகப்பதிப்பிக்கப்பட்டிருக்கும் பியோடார் தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' நூலும் இடம் பெற்று சிறந்த மொழியாக்கத்திற்கான விருதைப்பெறவிருக்கிறது.29.03.09, மாலை திருப்பூரில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. இச்செய்தியை இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
செய்தி அறிந்ததுமே என்னை வாழ்த்தித்தன் வலையில் விரிவான தகவல் வெளிட்டிருக்கும் எழுத்தாளர் திருஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.
http://jeyamohan.in/?p=1780

காண்க; குற்றமும் தண்டனையும்- மொழியாக்க அனுபவம்

வாசக எதிர்வினைகள்;

வணக்கம்,ஜெய மோஹனின் இணைய தளம் முலமாக உங்களுக்கு திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் சிறந்த மொழியாக்கத்துக்கான விருது இவ்வருடம் அளிக்கப்பட்டிருக்கிறது என அறிந்தேன்.வாழ்த்துக்கள்.நன்றி, நாஞ்சில் மகி.

வணக்கம் உங்கள் சிறப்பான பணிக்குக் கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் அம்மா.முனைவர் சே.கல்பனா.

1 கருத்து :

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வணக்கம் உங்கள் சிறப்பான பணிக்குக் கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் அம்மா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....