சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி-வாங்கியாக வேண்டிய பத்துப் புத்தகங்கள் பற்றிக் கேட்டபோது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் கீழ்க்காணும் பத்துப் புத்தகங்களைப் பட்டியலிட்டுத் தந்ததாக விகடன்.காம் செய்தி வெளியிட்டிருக்கிறது.அந்தப் பட்டியலில் என் மொழியாக்கத்தில் மதுரை பாரதி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கும் அசடனும் இடம் பெற்றிருக்கிறது.
http://news.vikatan.com/index.php?nid=6000
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்!
'தீதும் நன்றும்' மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்தவரும், 'சூடிய பூ சூடற்க' நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம், 'பனுவல் போற்றுதும்'.
சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, நிதானமாக எழுதித் தந்த பட்டியல் இது...
1. அறம் - ஜெயமோகன்
2. காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
3. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்
4. ஆழிசூழ் உலகு - ஜேடிகுரூஸ்
5. வண்ண நிலவன் கதைகள் - சந்தியா பதிப்பகம்
6. தாயார் சந்நிதி - சுகா
7. கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்
8. ஆறாவடு - சயந்தன்
9. போரும் வாழ்வும் - தால்ஸ்தோய்
10. அசடன் - தாஸ்தாவஸ்கி
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக