துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.1.12

’அசடன்’-மேலும்...

அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியிலும்
( நாஞ்சில் நாடன் பரிந்துரை ) அதைத் தொடர்ந்தும் வாசகர்கள்,எழுத்தாளர்கள் ஆகியோர் தெரிவு செய்து பரிந்துரைக்கும் நூலாக ‘அசடன்’ நாவலின் மொழியாக்கமும் இருந்து வருவது...  நூற்றாண்டுகள் சில கடந்தும், நிலைத்த புகழோடு நிற்கும் தஸ்தயெவ்ஸ்கியின் பேரிலக்கியப் படைப்பாக்கத் திறனுக்கே சாட்சி...எல்லாப் புகழும் தஸ்தயெவ்ஸ்கிக்கே....


புத்தகக் கண்காட்சி பற்றிய தினமலர் செய்திக் குறிப்பிலிருந்து..

மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகம் இந்த கண்காட்சியில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக 5,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளது. ஆண்டுக்கு, 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையான இந்த புத்தகம் 13 நாளில் புத்தக கண்காட்சியில், 5,000 பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. காந்திக்கு அடுத்த இடத்தை அன்னா ஹசாரே தக்க வைத்துக் கொண்டார். மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்ட அன்னா ஹசாரே பற்றிய புத்தகம் 4,000 பிரதிகள் விற்றது.சாகித்ய அகடமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல், வாசகர்களால் விரும்பி வாங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் சரித்திர நாவல், இரண்டு தலைமுறை வாசகர்களாலும் விரும்பி வாங்கப்பட்டது.தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள், நாவலோடு இசைத் தகடையும் இணைத்து வெளியிட்டது குறிப்பிட்ட அளவு விற்றுள்ளது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், பூமணியின் அஞ்சாடி, தாஸ்தவெஸ்கியின் அசடன் உள்ளிட்ட புத்தகங்களும் வாசகர்களால் விரும்பப்பட்டது.- 

2012இல் படிக்க வேண்டிய நூல்களாக - எழுத்தாளர் தமிழ்மகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. அசடன் - தஸ்தயேவஸ்கி, தமிழில்: எம்.ஏ.சுசீலா (மதுரை பாரதி புக் ஹவுஸ்)
2. கரமஸோவ் சகோதரர்கள் தஸ்தயேவஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு (என்.சி.பி.ஹெச்.)
3. அனுபவங்களின் நிழல்பாதை- ஹரி சரவணன், ரெங்கையா முருகன்(வம்சி பதிப்பகம்)
4. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)
5. கலங்கியநதி – பி.ஏ. கிருஷ்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)
6. கடல் – ஜான் பால்வில், தமிழில்: ஜி. குப்புசாமி (காலச்சுவடு பதிப்பகம்)
7 பசித்தபொழுது – மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்)
8. உருப்படாதவன் – அ.முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)
9. காவல்கோட்டம் - சு. வெங்கடேசன் (தமிழினி பதிப்பகம்)
10. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் (விடியல் பதிப்பகம்)
பதிவுகள் இணைய இதழில் குறிப்பு...
[ ஏற்கனவே எம்.ஏ.சுசீலா அவர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தணடனையும்' நாவலை தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். அது தமிழ் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தஸ்தயெவ்ஸ்கியின் 'அசடன்' நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். அம்மொழிபெயர்ப்பு தற்போது நூலுருப் பெற்றுள்ளது. மேற்படி நாவலைப் பற்றி சுசீலா அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதியிருந்த குறிப்புகளை இங்கே மீள்பிரசுரம் செய்கின்றோம். - -] 

1 கருத்து :

அப்பாதுரை சொன்னது…

இலக்கிய ஆர்வம் குறையவில்லை என்பதற்கு இது ஒரு சான்று.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது செய்தியைக் கண்டு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....