துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.1.13

ஒழிமுறி-உறவெனும் புதிர்-2


[ஒரு பக்கம் ஒழிமுறிக்கான வழக்கைத் தொடுத்து விட்டு,மற்றொரு பக்கம்  தன் கணவர் அன்பானவர்,அவர் மீது தனக்கு அன்பு இருக்கிறது என்றெல்லாம் அம்மா சொல்ல....ஏன் இந்த ஒழிமுறி....என்று சரத் குழம்ப புதிர் தொடர்கிறது-‘ஒழிமுறி’ - உறவெனும் புதிர்-1 இன் தொடர்ச்சி.] 


முதல்முறை கணவரைப் பிரிந்து பிறந்தகத்தில் இருந்தபோது சரத்துக்குக் கடுமையான வயிற்று நோய் கண்டுவிடதன் சகோதரனுடன் பல மருத்துவமனைப்படிகளிலும் ஏறி இறங்குகிறாள் மீனாட்சிஎல்லோரும் கை விரித்து விடஇந்த அலைச்சலிலேயே தன் தொழில் முடங்கிப்போய் விட்டதாக அலுத்துக் கொள்ளும் சகோதரன்எத்தனையோ குழந்தைகள் சர்வசாதாரணமாக இறந்து கொண்டுதானே இருக்கின்றன என்கிறான்அப்போது  தற்செயலாக அவர்களைப்பேருந்தில் சந்திக்க நேரும் தாணுப்பிள்ளை தன் குழந்தையின் நிலை கண்டு பதறித் துடிக்கிறார்மகனை அள்ளிச் சுமந்தபடி மருத்துவரின் காலைப் பிடித்துக் கொண்டு அவனுக்கு உயிர்ப்பிச்சை தர மன்றாடுகிறார்.ஒரு தந்தையாக அவர் காட்டும் அந்தக்கரிசனமே மீனாட்சியை மீண்டும் அவரிடம் கொண்டு வந்து சேர்க்கிறதுஅந்தக்கட்டத்தில்...,
‘’
பத்து மாதம் குழந்தையை வயத்திலே சுமந்தா போதும்எந்தப்பெண்ணும் தாயாகிடலாம்....ஆனா ஒரு தகப்பனாகணும்னா உள்ளே கனியணும்..’’என்கிறது  ஜெயமோகனின் வசனம்.அப்படி  உள்கனிந்த தகப்பனாகத் தன் கணவன் இருப்பதாலேயே மகனுக்காக சமரசம் செய்து கொள்கிறாள் மீனாட்சி இன்னொரு முறை... சிறுவன் சரத்துக்குக் கையில் வாதநோய் தாக்கியபோதும் பொறுப்புள்ள  ஒரு தந்தையாகத் தாணுப்பிள்ளை எடுத்த முயற்சிகள்,பட்ட அலைக்கழிவுகள்,அவனைப்போலவே தானும் பத்திய உணவைச் சாப்பிட்டபடி காலம் கழித்த  அவரது தியாகம் ஆகியவற்றை மீனாட்சி சரத்திடம் விவரிக்கும்போது படிப்படியாக அவரை ஒரு நல்ல தந்தையாக உணர ஆரம்பிக்கிறான் அவன். 
அன்னைக்குத் தந்தை மீது வெறுப்பில்லை,கோபமுமில்லை...
அவரது சினத்துக்கு வடிகாலாய் அடங்கிப்போவதிலும் அவளுக்குப் பெரிய மன வருத்தங்கள் ஏதுமில்லை... ! ஆனாலும் ஏன் இந்த ஒழிமுறிபுதிரை நீட்டிக்கும் அந்தக்கேள்விக்கான பதில்....தாணுப்பிள்ளைக்கும் அவரது தாய்-தந்தைக்கும் இடையேயான உறவிலும்,மீனாட்சிக்கும் அவளது மாமியாருக்கும் இடையிலான உறவிலும்  அடங்கியிருக்கிறது.
தாய்வழிச்சமூக அமைப்பில் வந்த மீனாட்சியின் மாமியார் காளிப்பிள்ளைபெண்ணை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான வாழ்வமைப்பின் வழி வந்தவள்அதிலேயே  ஊறித் தோய்ந்த அவள் சொத்துரிமையும்,அதிகார பலமும் படைத்தவள்தனக்கு விருப்பமில்லாத கணவனை நிராகரிக்க அவள் வழக்கு மன்றப்படிகளில் ஏறி ஒழிமுறி தர வேண்டியதில்லை;ஒரு வெற்றிலைப்பெட்டியை எடுத்து வீட்டு வாயிலில் வைத்தாலே போதும்,அவனோடான உறவுமுறிவுக்கான அந்த சமிக்ஞையை ஏற்று அவளது பாதையை விட்டு அவன்  விலகியாக வேண்டும் ;தன் கணவனான மல்லனை அவள் விலக்குவதும் அவ்வாறே. 
தன் அனுமதியோ,ஒப்புதலோ இன்றி மகன் திருமணம் செய்து கொண்டாலும் மகனை விட,  அவனால் ஒரு அடிமையை விடவும் இழிவாக நடத்தப்படும் தன்  மருமகள் மீதே வாஞ்சையைப்பொழியும் அவள்தன் வீட்டையும்,சொத்துக்களையும் உடமைகளையும் அவளுக்கே அளிக்கிறாள்தன்னைப்போன்ற தனித்தன்மை பெற்றவளாக அவளும் இருக்க வேண்டுமென்றும்,தன் மகனாகவே இருந்தாலும் அவன் இழைக்கும் வன்முறைகளுக்கும்,கடுஞ்சொற்களுக்கும் அவள் பதிலடி தர வேண்டும் என்றும் மருமகளைத் தூண்டுகிறாள் அவள்.தன் தாயைப்போல மனைவியும் ஆகி விடக்கூடாது என்ற அச்ச உணர்வினால்   தாயை வீட்டை விட்டே துரத்தி விடுகிறார் தாணுப்பிள்ளைஆனாலும் ஒரு பெண்ணுக்கு இருந்தாக வேண்டிய தன்மானம்,சுயமதிப்பு ஆகியற்றைக் குறித்த சிந்தனை விதைகளை மீனாட்சியின் உள்ளத்தில் தெளிக்கும் முதல் நபராக அவளது மாமியாரே இருக்கிறாள்.
வாழ்வின் இறுதிக்கட்டத்தில் நோய்வாய்ப்பட்டு மகனை நாடி வரும் நிலையிலும் அவன் தன்னை உள்ளே வாஎன அழைத்தால் மட்டுமே வீட்டுக்குள் நுழைவேன் என சுயகௌரவம் காட்டுகிறாள் காளிப்பிள்ளைஅந்தத் தாயின் தவிப்பைப்புரிந்து கொண்டு அவளை உள்ளே அழைக்குமாறு கணவரைத் தூண்டுவதோடு மரணப்படுக்கையிலிருக்கும் தன் மாமியாரை ஒரு குழந்தையைப்போலப்பேணுகிறாள் மீனாட்சிகாளிப்பிள்ளையின் இறுதிக்கட்டம் நெருங்குகிறதுமகனிடம் ஏதோ ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமென்ற ஆதங்கத்தோடு தாணுவைக்கூட்டிவரச்சொல்கிறாள் அவள்மீனாட்சி பதட்டத்தோடு அவரை அழைக்கவழக்கமான  அலட்சியத்தோடு அவர் அதை நிராகரித்து விடுகிறார்அந்தக்கட்டத்தில் மகன் மீதான் கோபம் மருமகள் மீதானதாக மாறிப்போகிறது காளிப்பிள்ளைக்குதன் மகனை அழைத்து வராததற்கு அவள் மீது பழியைச்சுமத்துவதோடு அவளது நன்றிகெட்டதனம்தான் தன்னை மகனிடமிருந்து பிரித்து விட்டது என்ற பழியையும் அவள் மீதே சுமத்தி விட்டுக் கோயில் வளாகத்திற்கருகே விழுந்து இறந்து போகிறாள்.
குறிப்பிட்ட இந்தக்கட்டத்தை அம்மா விவரிக்கக் கேட்கும் சரத்தன் தாயின் மதிப்பைப் புரிந்து கொள்ளாத தன் பாட்டியே நன்றியில்லாத ஒரு ஜீவனென்று ஆவேசம் கொள்கிறான்அப்போதும் கூட மீனாட்சி தன் மாமியாருக்குச் சார்பாகவே பேசுகிறாள்ஒரு தாய்க்கும் மகனுக்குமான உறவின் மர்மத்தைசூட்சுமத்தை மிக நுட்பமாகத் தொட்டுக்காட்டும் இடம் அதுகாளிப்பிள்ளையின் கோபம் மையம் கொண்டிருப்பது முழுக்க முழுக்கத் தன் மகன் மீதுதான் என்றாலும் அவன் மீதான அன்பையும் அவள் முற்றாகத் துறந்து விடவில்லைசிறுகுழந்தையாய் அவனைப்பெற்றெடுத்த கணம்,...அவனைக்கொஞ்சிய அந்தத் தருணம்மரணத் தருவாயில் அவள் முன் படமாய் விரிகிறதுவாழ்க்கையை முடிக்கும் எல்லைக்கோட்டில் நின்றுகொண்டிருக்கும் தன் மிகச்சிறிய விருப்பத்தைக்கூட அவன் நிறைவேற்ற முன் வராததில் அவளுக்கு ஆதங்கம்தான்ஆனாலும் அதைத் தன் மருமகள் மீதான கோபமாக மடை மாற்றிக்கொண்டு அவளைத் தூற்றியபடி வீட்டிலிருந்து வெளிநடப்புச் செய்வதன் வழி ஊரார் கண்ணுக்கு முன் மகனின் பிம்பத்தைக் காப்பாற்றி விடுகிறாள்ஒரு தாய்க்கு மட்டுமே வாய்க்கக்கூடிய நுட்பமான இந்த மனநிலையைத் தெளிவாகப்புரிந்து கொண்டு மாமியாரின் அந்தச் செயலை மகனிடம் நியாயப்படுத்திப் பேசுகிறாள் மீனாட்சி.
கல்லைப்போன்ற இறுக்கத்துடனேயே தாயிடம் நடந்து கொண்டிருந்த தாணுப்பிள்ளையும் கூட இறந்த தாய்க்குப் பிண்டம் வைக்கும் கட்டத்தில் சொல்லொணாத மன அழுத்தத்துக்கு ஆளாகியபடி மயங்கிச்சரிகிறார் என்பது புதிர்கள் நிரம்பிய உறவுகளால் கட்டமைக்கப்பட்டு,அலைக்கழிக்கப்படும் மனித வாழ்வுக்கு  கண்கூடான மற்றொரு சாட்சியமாகிறது.
வழக்கு நடந்து கொண்டிருக்கும் கட்டத்திலேயே  தாணுப்பிள்ளைக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு நோய் தாக்குகிறதுஅந்தக்கட்டத்தில் மருத்துவமனையில் உடனிருந்து எல்லாப் பணிவிடைகளையும் செய்யும் பொறுப்பை எந்தக் கசப்புணர்வும் இன்றி வலிய ஏற்றுக்கொள்கிறாள் மீனாட்சிஅவருள்ளும்  நெகிழ்ச்சி பரவுகிறது...இனி அந்த வழக்குக்குத் தேவை எதுவும் இருக்காது என அனைவரும் நினைக்கும் அந்தக்கட்டத்திலும் கூடஒழிமுறி வேண்டும் என்ற தன் கோரிக்கையில் மீனாட்சி திடமாகவே நிற்கிறாள்மகன் திகைத்துப்போய் நிற்கும் அந்தக் கட்டத்திலேதான் கணவன் - மனைவிக்கிடையிலான உறவுப்புதிரின் அந்த இறுதி முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.

மீனாட்சி ஒழிமுறிக்கான விண்ணப்பத்தை அளித்ததுதாணுப்பிள்ளைக்கு முதன்முதலாக  மாரடைப்பு நோய் தாக்கிய பத்தே நாட்களில்  என்ற வினோதமான செய்தி வழக்கு மன்றத்தில் எழுப்பப்படும்போதுதான்....அதற்கான விடையை மகனிடம் பகிர்ந்து கொள்கிறாள் மீனாட்சி. 
மருத்துவமனையில் வைத்து மீனாட்சியிடம் தன் தாயின் இறுதி வெளிநடப்பு பற்றிய வினாவைஐயத்தை எழுப்புகிறார் தாணுப்பிள்ளை.தான் ஒருவேளை இறந்து விட்டால் அதற்கு முன் அது பற்றித் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற துடிப்போடும் பதைப்போடும் ’’எங்கம்மாவை நீ என்ன சொன்னே....உன்னை அவ நன்றிகெட்டவன்னு சொன்னாளே..அது ஏன்..?’’என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப அவர் மூர்க்கத்தோடு எழுப்பஎந்தக்களங்கமுமே இல்லாதபடிதன்னை இழிவுபடுத்திய அவரது தாயின் மனநிலையைக்கூட மகன் மீதான அன்பாகப்புரிந்து வைத்திருந்த மீனாட்சி அதிர்ந்து போகிறாள்.தான் அவரது தாயை எதுவுமே சொல்லவில்லை என்று திரும்பத் திரும்பச்சொன்னபோதும் அவர் அதை ஏற்கவோ..தன்னை நம்பவோ தயாராக இல்லைஇத்தனை காலம் வெறுப்புக்குரியதாக இருந்த தன் தாயின் ஆளுமை மனைவியை மற்றொரு தட்டில் வைத்து நிறுக்கும்போது அவருக்கு உயர்வானதாகி விடுகிறது.இதுவும் கூட உறவுகளின் சதிராட்டப்புதிர்களில் ஒன்றுதான்.
’’எங்கம்மா மகாராணிடீ...அவ பொய் சொல்ல மாட்டா...உன்னைப்போல அடிமையில்லே அவ’’என்கிறார் அவர்மகனுக்கு ஒரு தந்தை வேண்டுமென்பதற்காகவே பிறந்தக உறவை முறித்துக் கொண்ட தன்னை அதை வைத்தும்தன் தந்தையின் சாவுக்குத் தான் செல்லாததை வைத்தும் பழிக்கிறார்அந்தக் கணத்தில்..,அந்த நொடியிலேயே ஒழிமுறிக்கான தீர்மானத்தை எடுக்கிறது அவள் மனம்காலம் முழுவதும் கணவன்,குடும்ப கௌரவம் என்ற பாரங்களைச் சுமந்து சுமந்து இளைத்த அவள் முதுகை முறித்த அந்த இறுதித் துரும்பே ஒழிமுறி என்னும் உறுதியான சமரசமற்ற முடிவுக்கு அவளைக் கூட்டிச் செல்கிறதுதன் மீது நம்பிக்கையே இல்லாத ஒரு கணவனோடு வாழ்ந்த வாழ்க்கை வீணானது என்னும் உணர்வு அவளுக்குள் மின்னலடிக்கபெண்ணின் சுய மதிப்புப்பற்றித் தன் மாமியார் சொன்ன போதனைகள் அவளுக்குப் புதிய வெளிச்சத்தை உண்டாக்குகின்றன.

கணவர் மீது வெறுப்பும் இல்லை...பகைமையும் இல்லை...இத்தனை ஆண்டு பழகிய தோஷத்துக்காக எப்போது உதவி தேவையென்றாலும் வரவும் தயார்...ஆனாலும் நான் இனி எவருக்கும் மனைவியில்லைஎன்ற பிரகடனத்தோடு குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறாள் மீனாட்சி.

ஒழிமுறி-உறவெனும் புதிர்-1

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....