அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒரு பகுதியான கலிஃபோர்னியாவிலிருந்து வெளிவரும் தென்றல் மாதஇதழின் மார்ச் [14/2015] வெளியீட்டில் 'எழுத்தாளர் அறிமுகம்'பகுதியில் என்னைக்குறித்த விரிவான அறிமுகக்கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் அரவிந்த் ;
நான் முன்பு எழுதிய தரிசனம் சிறுகதையும் அதே இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.
பென்சில்வேனியாவில் வசிக்கும் என் பேராசிரியத் தோழி இரண்டு நாட்களுக்கு முன்பு மிகுந்த மகிழ்ச்சியோடு இச்செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
முன் பின் கண்டு பழகியிராத என்னைக்குறித்து இத்தனை விரிவான நுணுக்கமான தகவல்களுடன் அமெரிக்க மண்ணிலிருந்து ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டிருக்கும் முகம் தெரியாத திரு அரவிந்த் அவர்களுக்கும்,தென்றல் ஆசிரியர் குழுவுக்கும் என் நெகிழ்வான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு அக்கட்டுரையை இணைய வாசகர்களோடும் பகிர்ந்துமகிழ்கிறேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக