மார்ச் மாத விகடன் தடம் இலக்கிய இதழில் இன்னும் சிலசொற்களாய் என் நேர்காணல்
இன்னும் சில சொற்கள் - எம்.ஏ.சுசீலாஓவியம் : பிரேம் டாவின்ஸி
’தடம்’ இதழுக்காக…
இன்னும் சில சொற்கள்
[சுருக்கப்படாத வடிவம்]
-
பெண்?
தன் சுயமும். பலமும் உணர்ந்து தெளிந்து தன்வாழ்வைத் தானே வடிவமைத்துக்கொள்ளும் பெண்ணே என் தெரிவு.
மாதவிடாய்?
மிக இயல்பான ஓர் உடல் இயக்கம்
-
கருப்பை?
பெண் உடலில் இருப்பது,
சில வேளைகளில் அவள் வசத்தில் இல்லாமல் போவதும் கூட.
* சுதந்திரம்?
மனத் தளைகளிலிருந்து பெறும் விடுதலை
-
உங்களின் யாதுமாகியவர்?
என் 'யாதுமாகி' நாவலில் வரும் தேவி
-
மொழியாக்கம் ?
உச்சபட்ச உழைப்பைக்கோரும் சமூகச்செயல்பாடு;
மூலநூலின் உன்னத தரிசனத்தை,உணர்வுநிலைகளை ஒத்த அலைவரிசையில் உள்வாங்கி,,உயிர்த்துடிப்போடு என் மொழிக்குக் கடத்தும் சுகமான சவால்
-
தஸ்தாயவ்ஸ்கி ?
இன்னொரு இலக்கியத் தடத்தில் இணையாகப் பயணப்படும் எழுச்சியை என்னுள் விதைத்து,என் முகவரியை விரிவாக்கிய பேராசான்.
-
குற்றம்…தண்டனை?
செய்யும்போது நியாயப்படுத்திக்கொள்ளும் அதே குற்றம், செய்தபின் தண்டனையாகி விடுகிறது தன்னெஞ்சு சுடுவதால்.
-
பாராட்டு?
’யாதுமாகி’ நாவலின் உயிர்நிலை தொட்டபடி,,முகம் தெரியாத வாசகியிடமிருந்து வந்த நான்குவரி மின்அஞ்சலும்,600 ரூபாய் விலையில்’அசடன்’ மொழிபெயர்ப்பை வாங்கிப்படித்து விட்டுக் கைபேசியில் அழைத்து நெகிழ்ந்த எளிய தையல் கலைஞரின் வார்த்தைகளும்.
-
பயணம்
என் உயிரணுக்களைப் புதுப்பித்துக்கொள்ள அவ்வப்போது நான் கைக்கொள்ளும் உத்தி.
-
ஆச்சரியம்?
ஒவ்வொரு புலரியும்..
-
நாளை என்பது?
நாளை என்பது மறைபொருள்.
இன்று என்னும் கைப்பொருளை முதலில்.அர்த்தப்படுத்திக்கொள்ளப்பார்க்கிறேன்.
-
ஆண்டாள்?
மொழியைத் தன்வயப்படுத்தியிருக்கும் முன்னோடிப்பெண் ஆளுமை.
ஆங்கிலம்?
முதுகலை ஆங்கிலப்படிப்பு கடைசி வினாடியில் கைநழுவிப்போன ஏக்கம் இந்த நொடி வரை!
.
எப்போதைக்குமானநட்பு?
நட்புக்கள் நான் பெற்ற நல்வரங்கள்.
பாலியம் முதல் எல்லா நட்புக்களும் வாழ்நாள் நட்புக்களே.
-
மரபு?
பழைய அல்லவை கழிதலும்
புதிய நல்லவை புகுதலும்
-
கட்டுடைப்பு?
மூலப்பிரதியை முழுமையாய் மாற்றிவிடாதவரை…
காலத்தின் தேவை, நியாயம் கேட்க எழும் கலகக்குரல்
-
இஸங்கள்?
இலக்கியத்தையும், சமூகத்தையும் அடியொற்றிப் பிறந்த இஸங்கள் இன்று அவற்றை ஆட்டிப்படைத்து ஆக்கிரமித்தபடி!.
குறும்படம்?
என்றாவது எடுத்தே தீருவேன் என்ற நெட்டைக்கனவுடன் நான்...
எம்.ஏ.சுசீலா
சந்திக்கும் வாழ்க்கை,எதிர்ப்படும் மனிதர்கள்,வாசிக்கும் நூல்கள் இவை தரும் பாடங்களைத் தொடர்ந்து கற்றுவரும் மாணவி.
சமீபத்தில் வாசித்தது?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் தன்வரலாறு- தமிழில், ராஜலட்சுமி சீனிவாசன்
பெண்?
கருப்பை?
உங்களின் யாதுமாகியவர்?
மொழியாக்கம் ?
தஸ்தாயவ்ஸ்கி ?
குற்றம்…தண்டனை?
பாராட்டு?
பயணம்
ஆச்சரியம்?
நாளை என்பது?
ஆண்டாள்?
மரபு?
கட்டுடைப்பு?
இஸங்கள்?
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக