துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.6.19

அசடன் - மொழிபெயர்ப்பு வாசிப்பும்,உரையாடலும் சுவிஸ்ஸில்..

தஸ்தயேவ்ஸ்கியின் "அசடன்"  மொழிபெயர்ப்பு குறித்த உரையாடலும் வாசிப்பும் சுவிஸ் நாட்டில் நிகழவிருப்பதாக அங்கிருந்து எனக்கு எழுத்தாளர்  றஞ்சி அவர்கள் அனுப்பிய செய்தியும்,அறிவிப்பும்


வாசிப்பும் உரையாடலும் - சுவிஸ் -நிகழ்வு 22
தஸ்தயேவ்ஸ்கியின் "அசடன்" புத்தக உரையாடலும் கோடை கால கலந்து மகிழ்வும்.
1200 பக்கங்களில் எம்.ஏ.சுசீலாவின் தமிழ் மொழிபெயர்ப்பில் அசடனின் உலகம் விரிந்திருக்கிறது.
இந்த உலகத்தை அதன் சிந்தனைப் போக்குகளை உணர்வுகளை வாழும் மனிதர்கள் கொண்டிருக்கும் யதார்த்தத்தை அவர்கள் காணும் உண்மையை முற்றாக நிராகரிக்கிறான் இந்த அசடன். அவனது உண்மை அவர்களது யதார்த்தத்திலிருந்து முற்றாக வேறுபட்டிருக்கிறது. முற்றிலும் புதிதான ஒரு யதார்த்தத்தைக் காண விரும்பி அதை அவர்களிடம் எதிர்பார்ப்பதினால் அவன் அவர்களின் எதிரியாகிப் போகிறான்.கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....