துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.7.20

‘நான் படிக்கணும்’-’கதை நேரம்’ 18 (தினமணி கதிர்- ’கண் திறந்திட வேண்டும்’)

16/04/ 2000 இல் நான் எழுதி தினமணி கதிரில் வெளியான சிறுகதை ’கண் திறந்திட வேண்டும்’.அந்தக்காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான தொடரான ’கதை நேரம்’பகுதியில் இந்தச் சிறுகதையும் 14/6/200 இல் ‘நான் படிக்கணும்’என்ற தலைப்புடன் குறும்படமாக்கப்பட்டு ஒளிபரப்பானது. அதன் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக யூ ட்யூபில்இதைத் தேடிக்கொண்டிருந்தேன். தற்செயலாக இன்று கண்ணில் பட்டது.அந்தக் காணொளியோடு பிரசுரமான என் கதையையும் படித்து ஒப்பிட விரும்புவோருக்காகக் கதையின் இணைப்பும் இத்துடன். http://www.masusila.com/2010/11/blog-post_5383.html#more [காணொளியின் தொடக்கத்தில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் என் ஒப்புதலைக்கேட்காமலேதான் பாலு மகேந்திரா அவர்கள் இந்தக்கதையைப் படமாக்கினார்; இது ஒளிபரப்பாகப்போகும் நாளில்தான் எனக்கு செய்தி அனுப்பினார்; இது குறித்த என் வருத்ததை முன்பே இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
https://m.facebook.com/susila27/posts/1843122282408367
பாலு மகேந்திராவின் பல படங்களுக்கு நான் ரசிகை என்றாலும்,இந்தக்குறும்படம் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அது ஒன்று மட்டும் இன்னும் என்னுள் ஒரு நெருடலாகவே...]

https://www.youtube.com/watch?v=41e_ddZGVXc&feature=emb_logo
கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....