துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.9.23

ஒலி வடிவில் என் சிறுகதைகள் சில

நிழல் சொரியும் இனிய மரத்தடிகள் கதை சொல்லவும் கேட்கவும் உகந்த இடமாக நம் மரபில் காலம் காலமாக விளங்கி வருகின்றன. இன்றைய நவீன தொழில் நுட்ப யுகத்துக்கேற்ப 

Under The Tree  

என்பதையே தலைப்பாக்கி அரிய பல தமிழ்ச்சிறுகதைகளையும் ஆன்மீக புராணக்கதைகளையும் அரிய பல தகவல்களையும் பல சமூக ஊடகங்கள் வழியே [வாட்ஸ்அப், பாட்காஸ்ட் போன்ற டிஜிட்டல் தளங்களில் ] வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்து வருபவர் திருமதி ரம்யா வாசுதேவன். ஏதோ சில காரணங்களால் அச்சு ஊடகத்தில் வாசிக்க முடியாதவர்களுக்கும், வாசிக்கும்போதே சிலவற்றைத் தவற விட்டவர்களுக்கும் அவர் செய்யும் இந்த அரும் பணி மிகவும் பயனளித்து வருகிறது. 


’’கற்றலில் கேட்டலே நன்று..’’என்பது பழமொழி நானூறில் இடம் பெறும் வாசகம். ’’கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதே சொல்’’ என்று குறள் கூறுவதைப் போல  ரம்யா சொல்லும் கதைகள், இது வரை கேளாதோரைக் கேட்கத் தூண்டுபவை மட்டுமல்ல, அந்தக் கதைகளை இதுவரை வாசிக்காமல் இருப்பவர்களை வாசிக்கவும் தூண்டி விடுகிறது அவரது குரல். அதில் ததும்பும் உணர்ச்சி பாவங்களும் தகுந்தபடி அமையும் ஏற்ற இறக்கங்களும்...கதைகளை வெறுமே வாசித்து விட்டுப்போகாமல் அவற்றில் ஒன்றிக்கலந்து குறிப்பிட்ட படைப்பின்  சுருக்கத்தை..அதன் சாரத்தைத் தன் மொழியில் தன் நடையில் சுவாரசியமாகச் சொல்வதும் அவரது தனித்துவம்.

’’இப்போது மூன்று வருடங்களாக தொடர்ந்து தினமும் காலை 8.30 மணிக்கு ஒரு கதை வெளியாகிவிடும். இன்றுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் என் கதையைக் கேட்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் 11 குழுக்கள் அமைத்து அதில் தினமும் இலவசமாக எல்லோருக்கும் கதை சொல்லி வருகிறேன்” என்று பெருமை பொங்கச் சொல்லும் ரம்யாவுக்கு, கடந்த ஆண்டு சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில் நாடன் விருதுகளில், ‘ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதைசொல்லி’ எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதைசொல்லி ரம்யா வாசுதேவன்!



திருமதி ரம்யா வாசுதேவனின்  குரலில் பதிவாகி வெளிவந்திருக்கும் என் சிறுகதைகளும் அவற்றுக்கான இணைப்புக்களும் கீழே;

ஊர்மிளை

https://open.spotify.com/episode/6hDZlJqMueFrxlvBtBmeR8

தேவந்தி

https://open.spotify.com/episode/6LIEsl2txwD1s1fq5zpP6A

பொம்பள வண்டி

https://open.spotify.com/episode/3cVUEeG02Du0TOQYEn2d1M

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....