இந்தக் கட்டுரையை எழுதியே தீர வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.
ஆண்டாளின் புகழையோ இலக்கியப்பெறுமானத்தையோ நான்
உயர்த்திப்பிடித்தால்தான் உயரப்போகிறது என்பது இல்லை.
நான் எழுதுவதாலோ எழுதாமல் இருப்பதாலோ எந்த மாற்றமும் எதிலும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
ஆனால் இதை இப்போது நான் பதிவு செய்யாவிட்டால் -
இதை எழுதத் தவறினால்
நான் படித்த தமிழும் நான் ரசித்த ஆண்டாளும் வீண் என்ற குற்ற உணர்வு என்னைக்கொல்லும்.
ஆண்டாள் என்ற பெண்ணோடு நான் கொண்டிருக்கும்மானசீக நட்பும்
அவள் தமிழ் மீதான என் நேசமும் மட்டுமே இதை எழுதத் தூண்டியவை
.சார்பு நிலைப்பாட்டுக்கோ காழ்ப்புணர்வுக்கோ இடம் தராமல் கருத்தைக் கருத்தால் மட்டும் எதிர்கொள்ள இக்கட்டுரையை ஒரு வழியாக வடிகாலாகக் கொண்டிருக்கிறேன்.
இக்கட்டுரையை வெளியிட்டு என் வடிகாலுக்கு- வேறொரு மாற்றுக் கருத்துத் தரப்புக்கு வழி அமைத்துத் தந்த தினமணி.காமுக்கு என் நெகிழ்வான நன்றி..
தினமணி.காமில்
என் கட்டுரை...
