துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.1.18

தினமணி.காமில் தீதும் நன்றும் - ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை முன் வைத்து...



இந்தக் கட்டுரையை எழுதியே தீர வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.
ஆண்டாளின் புகழையோ இலக்கியப்பெறுமானத்தையோ நான் 
உயர்த்திப்பிடித்தால்தான் உயரப்போகிறது என்பது இல்லை.
நான் எழுதுவதாலோ எழுதாமல் இருப்பதாலோ  எந்த மாற்றமும் எதிலும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

ஆனால் இதை  இப்போது நான் பதிவு செய்யாவிட்டால் - 
இதை எழுதத் தவறினால் 
நான் படித்த தமிழும் நான் ரசித்த ஆண்டாளும் வீண் என்ற குற்ற உணர்வு என்னைக்கொல்லும்.

ஆண்டாள் என்ற பெண்ணோடு நான் கொண்டிருக்கும்மானசீக நட்பும்
அவள் தமிழ் மீதான என் நேசமும் மட்டுமே  இதை எழுதத் தூண்டியவை

.சார்பு நிலைப்பாட்டுக்கோ காழ்ப்புணர்வுக்கோ இடம் தராமல் கருத்தைக் கருத்தால் மட்டும் எதிர்கொள்ள இக்கட்டுரையை ஒரு வழியாக வடிகாலாகக் கொண்டிருக்கிறேன். 


இக்கட்டுரையை வெளியிட்டு என் வடிகாலுக்கு- வேறொரு மாற்றுக் கருத்துத் தரப்புக்கு வழி அமைத்துத் தந்த தினமணி.காமுக்கு என் நெகிழ்வான நன்றி..

தினமணி.காமில்
என் கட்டுரை...




.

4 கருத்துகள் :

PV சொன்னது…

த நா கோபாலன் தன் முகநூலில் உங்கள் தினமணி கட்டுரையை எடுத்தியம்ப அக்கட்டுரைய‌ நான் வாசிக்கப்போய் மிகவும் நீளமானதால் முடிக்கமுடியவில்லை.

இந்த விசயத்தில் என் கட்டுரையொன்றை இங்கு காண்க: https://freeflowofthoughts.blogspot.in

வைரமுத்து பேச எடுத்துக்கொண்ட பொருள்: ஆண்டாள் என்ற இலக்கிய ஆளுமை. ஆண்டாள் என்ற ஆழ்வாரன்று. அஃதொரு இலக்கிய கூட்டம்.

பாரதியாரைப்பற்றி நாம் பேசும்போது அவர் வாழ்க்கை வரலாற்றை நிறைய பேசுகிறோம். அதைப்போலவே ஆண்டாளைப்பற்றியும் ஒரு தமிழ் ஆர்வலர் பேசலாம். அங்கு பக்திக்கு இடமில்லை. பகதர்கள் போய் அப்பேச்சைக்கேட்டால், அது அவர்களின் தவறு. பெரியார் பேச்சை மடாதிபதிகள் கேட்கலாமா?

இலக்கிய உரை, மற்ற பேச்சுக்களைப்போல கொள்ளப்படாது தரகு வை அல்லது சரியான தரகுகளை வை என்றெல்லாம் கேட்க முடியாது. நான் எங்கோ எப்போதோ படித்த ஞாபகம். என்றெல்லாம் சொல்லல்லாம். இலக்கியச் சுவை இருந்தால் போதும்.

வைரமுத்து இப்படித்தான் பேசவேண்டுமெனப்து நாளை தமிழகத்தை தாலிபான் ஆஃகானிஸ்தானை நோக்கி அல்லது அதைப்போன்ற நாடாக்கிவிடும்.. இவ்வழிவுக்கு நம் பங்கைக்கொடுக்கக் கூடாது.

வைரமுத்துவின் கருத்துக்களே எனதுமாகும். குருப்ரம்பரா பிரபாவமே ஆழ்வார்கள் வாழ்க்கை சரிதங்களைச் சொல்கிறது. அதுவே வைணவத்திலும் நம்ப்படுகிறது. அதன்படி ஆண்டாள் ஓர் அநாதைக்குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு பெரியாழ்வாரால் வளர்க்கப்படுகிறாள். அவரின் சமூகங்கே சநாதனபழைமைவாதிகள் நிறைந்தது. அவள் குழந்தையாக இருக்கும்போது பிர்ச்சினை இல்லை. பெரியவளானதும் அவள் குலமெது என்று தெரியாததால் நம்மவருள் சேர்க்க முடியாது என்று நிலையை எடுத்திருப்ப ர். இது எங்கும் நடக்கக்கூடியது. பிராமணர்களில் மட்டுமன்று. அப்படி நடந்ததால், அவர் அவளை வேறெங்காவது கொண்டுப்போய்த்தான் விடவேண்டும். அவர் தேர்ந்தெடுத்தது திருவரங்கம். அதற்கும் வச்தியாக அவளின் பாடல்கள் அமைந்தன.

அக்கால கட்டத்தில் தேவதாசி முறை இருந்ததா? இல்லையா என்று தெரியாது. அவசியமுமில்லை. ஆனால் அவர் தன் பெண்ணை கன்னிப்பருவத்தில் ஒரு பெரிய ஊரில் கோயில்காரர்களிடம் ஒப்படைத்தார் என்பதே குருபரம்பரா பிரபாவம். இதைத்தான் வைரமுத்து பார்க்கிறார். ஆனால் நீட்ட முடியவில்லை. பின்வரும் காலம் இக்கேள்வியை ஆராயுமென முடிக்கிறார். இதுவே என் கருத்தும். மனங்களைச் சிறையிலிடமுடியா; எண்ணங்களை மிரட்டல்களால் கட்டிப்போட‌ முடியா. இன்று பயந்து அமைதி காப்பார்கள். வரும் தலைமுறைத் தமிழர்க்ள் இக்கேள்விகளை கண்டிப்பாக எடுப்பார்கள். மதவாதிகள்; மத அரசியல்வாதிகளிடமிருந்து தமிழர்கள் தங்களை வருங்காலத்தில் மீட்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு விநாயகம் அவர்களுக்கு,
உங்கள் கருத்தையே நானும் சொல்லி இருக்கிறேன்.
என் கட்டுரைத் தொடக்கத்திலேயே - மதவாதம்,சாதீய வாதம் கூடாதென்று - அதைத்தான் சொன்னேன்.முழுமையாய் இலக்கியம் பேசி இருக்கலாம் என்றும்..அதை அவர் செய்யத்தவறியது எப்படி என்றும்அதை அவர் எப்படி செய்திருக்கலாம் என்றே சொல்லியிருக்கிறேன்.
தயவு செய்து என் கட்டுரையை முழுமையாய் இல்லையெனினும் நான் முன் வைத்த வாதங்களைப்படித்து விட்டுப் பேசவேண்டுகிறேன்

PV சொன்னது…

Many thanks for allowing my views.

லோகமாதேவி சொன்னது…

அன்பின் சுசீலாம்மா
உங்களின் இந்தப்பதிவை தாமதமாக வாசித்ததில் வருந்துகிறேன் திரு வைரமுத்து அவர்களின் ’’தமிழை ஆண்டாள்’’ பதிவிற்கு பின்னர் அவருக்கும் அப்பதிவிற்கும் ஆதரவாகவும் எதிராகவும் பலர் ஆவேசமாக கச்சைகட்டிக்கொண்டு களத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர். ஆயினும் நீங்கள் உங்கள் ஆதங்கத்தை நிதானமாக முதிர்ச்சியுடன் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் அது மிக பாராட்டத்தக்கது
எந்த இக்கட்டிலும் இத்தனை முதிர்ச்சி இருப்பதே வாழ்வின் இயங்கியலில் நாம் கற்றுக்கொண்டிருக்க வேண்டிய முதல் பாடமென்று எப்போதும் நினைப்பேன் (எனக்கு இன்னும் அது கைகூடவில்லை எனினும் ). இது உண்மையில் பக்தி இலக்கியத்தின் இக்கட்டல்லவா?
இதை எழுதாவிடில் // நான் படித்த தமிழும் நான் ரசித்த ஆண்டாளும் வீண் என்ற குற்ற உணர்வு என்னைக்கொல்லும்.// என்று உங்களின் இந்தப்பதிவை அழகாக நியாயப்படுத்தியும் இருக்கிறீர்கள்
இதற்கப்புறமும் இதனை விவாதிப்பவர்களுக்கு என்னதான் சொல்வீர்கள்?
தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது எனச்சொல்ல இவருக்கல்ல யாருக்குமே உரிமையும் தகுதியுமில்லை
உங்கள் பதிவில் வைரமுத்து அவர்களின் பதிவிற்கான மென்மையான ஆனால் அழுத்தமான எதிர்வினை மட்டுமல்லாது ஆண்டாள் குறித்த அழகிய மதிப்பீடும், வைரமுத்து அவர்கள் தெரிவித்த கருத்துக்கு மறுமொழியும் உடன் ஆண்டாளின் பிற சிறப்புகளையும் சொல்லி இருக்கிறீர்கள் ஆண்டாள் யாரென்றெ அறியாதவர்களும் இந்தப் பதிவினைபார்க்கையில் அறிந்துகொள்ள முடியும் அவளை அண்மையிலெனெ

வெரும் யூகங்களுடனும் செருக்குடனும் விநாச காலத்தில் விபரீத புத்தியுடன் எழுதபட்ட பதிவொன்றிற்கு தமிழை ரசிக்கும், துதிக்கும் மதிக்கும் ஒருவராக உங்களின் பதிவு அழகு
தமிழும் பிறர் தர வாரா இல்லையா அம்மா?. நாம் ஆழ்ந்து உணர்ந்து விரும்பி கற்க வேண்டும் பின்னரே பொது ஊடகங்களில் வாய் திறக்க வேண்டும்
பலர் வைரமுத்துவிற்கு எதிரிவினையாற்றுகையில் நீங்களே மரியாதையான பொருத்தமான எதிர்வினையாற்றி இருக்கிறீர்கள்
அனைத்திற்கும் நன்றியுடன்
லோகமாதேவி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....