துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.2.09

நாகேஷ்- சில நினைவுகள்

சில நாட்களாகத்தொடர்ந்த வாழ்த்துக்களும்......தொடர்ந்த அஞ்சலிகளுமாக வலை இயங்கிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.சாதனை படைத்த மனிதர்களையும், முத்திரை பதித்த கலைஞர்களையும், சில சுவடுகளை விட்டுச்செல்லும் சிந்தனையாளர்களையும் அத்தனை எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்பதோடு ,இவ்வாறான தருணங்களில் அவர்கள் குறித்த செய்திகளை ஒருங்கிணைத்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் எழுதுகோலை ஏந்தியிருப்பவர்களின் தார்மீகப்பொறுப்புக்களில் ஒன்றாகிறது. அந்த வகையில் நாகேஷைப்பற்றிய சில நினைவுத்தீற்றல்கள்..........

வசனப்போக்கில் அமைந்திருந்த கலைவாணரின் நகைச்சுவைப்பாணியை,உடல்மொழியாக-மேலை நாட்டுத்திரைப்படப் பாணிக்கு மாற்றியவர் சந்திரபாபு. அவரைத்தொடர்ந்து 60களில் தமிழ்த்திரை உலகில் அடி வைத்த நாகேஷும் கூட உடல் மொழியைக்கையாண்டபோதும்- அவரது மெலிந்த, ஒடிசலான உடல்வாகு அதற்கு ஒத்திசைவாக இருந்தபோதும்,உடலைமுறுக்கி, நெளித்து,குட்டிக்கரணம் அடிக்கும் அங்க சேஷ்டைகள் மட்டுமே நாகேஷின் பாணியாக இருந்ததில்லை. அதற்கெல்லாம் மேலான வேறொரு தன்மையும் கூட அவரது நடிப்பில் ஊடும்,பாவுமாக விரவிக்கிடந்ததனாலேயே.....காலம் கடந்தும் அவரது நகைச்சுவை ரசிக்கப்பட்டது.நகைச்சுவையோடு குணசித்திரமும் கலந்து பரிமாறும் ஒரு நடிகராக அவரை ஆக்கியதும் கூட அவரது இந்தத்தன்மைதான்.அதை அவரது முதல் படமாகிய 'சர்வர் சுந்தர'த்திலேயே இனம் காட்டிய இயக்குநர் பாலச்சந்தர்,தொடர்ந்து 'எதிர் நீச்சல்','நீர்க்குமிழி','மேஜர்சந்திரகாந்த்' ஆகிய படங்களின் வழி அதை மேலும் உறுதிப்படுத்தினார். தனது 'நம்மவ'ரிலும்,'மகளிர் மட்டு'மிலும் அதை மிகச்சரியாகப்புரிந்துகொண்டு நாகேஷைப்பயன்படுத்திக்கொண்டார் கமல் .மாறாக முழுமையான குணசித்திர நடிப்போ,நகைச்சுவையோடு இணைந்த வில்லன் பாத்திரமோ அவரது திறமைக்குச்சரியான தீனி போடவில்லை என்பதற்கு 'அபூர்வ சகோதரர்கள்'.'ஒரு கைதியின் டயரி','பூவெல்லாம் உன் வாசம்' போன்ற படங்களே தகுந்த சாட்சிகள்.இந்தப்பட்டியலில் 'தில்லானா மோகனாம்பா'ளுக்கு வேண்டுமானால் விதிவிலக்கு அளிக்கலாம்.

தருணம் பார்த்து சடாரென்று அவர் வாயிலிருந்து உதிரும் ஒரு சொல்...,மிகச்சரியான ஒரு timing ஆகியவையே நாகேஷின் தனித்தன்மை என்பதற்கு அவர் நடித்த படங்களிலிருந்து ஆயிரம் உதாரணங்களைக்காட்ட முடியும்.'திருவிளையாட'லின் தருமி உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் காலப்பிரமாணத்தைக்கணிக்கும் அவரது 'டைமிங் சென் 'ஸுக்குக் கட்டியம் கூறுபவை.அந்தக்காலகட்டத்தில் சிவாஜியே கூட சற்று பயத்தோடுதான் படப்பிடிப்புத்தளத்துக்கு வருவதுண்டு என்று படித்ததுண்டு.
'காதலிக்க நேரமில்லை'யில் நாகேஷ் அடிக்கும் லூட்டிகளும்,பாலையாவுக்குக்கதை கூறும் லாகவமும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் தரமான நகைச்சுவைகள்.
நகைச்சுவை என்ற பெயரில் மலினமான சரக்குகளை அமோகமாக விற்பனை செய்யத்துடிக்கும் இன்றைய தலைமுறை நடிகர்களும், அவர்களுக்காகவென்றே நகைச்சுவை 'டிராக்'கை உற்பத்தி செய்யும் தனிப்பட்ட குழுவினரும் நாகேஷிடமிருந்தும், அவரது படங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாகக்கொட்டிக்கிடக்கின்றன. அதே போல குணச்சித்திரப்போக்கு இணைந்த நகைச்சுவையை வெளிப்படுத்திய காரணத்தினால்தான், சில படங்களில் கதாநாயகனாகவும் கூட அவர் தயக்கமின்றி ஏற்கப்பட்டிருக்கிறார் என்பதையும் 'ஹீரோ'வாகத்துடிக்கும் இந்தக்காலகட்ட நடிகர்கள் மனதில் வைத்துக்கொள்வது, நல்லது.நாகேஷின் திறமைகளைத்தமிழ்த்திரை உலகம் எந்த அளவுக்கு முழுமையாகப்பயன்படுத்திக்கொண்டது என்பது போன்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தபோதும், தனக்குக்கிடைத்த களத்தை-அந்த வரையறைகளுக்கு இடையேயும் கூட- நாகேஷ் கூடியவரையில் மிகச்சிறப்பாகப்பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
மகத்தான அந்தக்கலைஞனுக்கு அஞ்சலிகள்.

2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

Madam Susila,

வேறு ஒரு வலைப்பூவில் (http://raviswaminathan.blogspot.com) நான் இட்ட பின்னூட்டம் கீழே:

அன்புள்ள ரவி,

மிகவும் ரசிக்கத்தக்க சிறுகட்டுரை! நானும் சில படங்களை நினைத்துப் பார்த்தேன்!
1.' அபூர்வ ராகங்கள்': சமூகத்தில் மிகவும் மதிக்கப் படும் ஓரு டாக்டர் இரவில் குடிகாரனாய் மாறுவதும், பழியைத் தன் கற்பனைத் தம்பியின் மீது போடுவதும் சூப்பர்!
2. அவர் முதல் முறை வில்லனாய் நடித்த கமலின் 'அபூர்வ சகோதரர்கள்'. வில்லனாய் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்களே என்று அவர் தயங்கியதாகவும் கமல் அவரை ஊக்குவித்ததாகவும் கேள்வி!
3. கோமலின் 'சாதிக்கொரு நீதி ' (ஒரிஜினல் நாடகம் ' செக்கு மாடுகள்') யில் வரும் புரட்சிக்கார சாஸ்திரிகள் பாத்திரம். 'மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள், அங்கே ஆஹாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி ' என்ற பாரதியின் வரிகள் இவர் நடிப்பில் உண்மையிலேயே உயிர்த்தெழும்!
4. வேறு ஒரு படம், பெயர் நினைவில்லை. தன் மகனை குண்டர்களிடம் இழந்த அவர் அவர்களின் தலைவனை ஒரு மலைக்கோயிலின் படிகளில் எதிர் கொள்ளும்போது உடம்பெல்லாம் துடிப்பது பார்க்க வேண்டிய காட்சி. 'மஹாத்மா காந்தி கையில தடிக்கு பதிலா ஒரு AK 47 இருந்திருந்தா எதிராளி சலாம் போட்டுட்டுப் போயிருப்பாண்டா! '
5. மற்றும் சில கிரேசியின் படங்கள் : 'மைக்கேல் மதன காம ராஜன்', 'பஞ்சதந்திரம்' போன்றவை
6. வேறு ஏதோ ஒரு பழைய Black & White படத்தில் வசிய மருந்தைத் தவறாக முழுங்கி விட்டுக் குமாரி சச்சுவின் அண்ணன் இவரை ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்த பிறகும் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு 'மாலுவைக் கொஞ்சம் ஜன்னலண்டை வரச்சொல்லு!' என்பது!
7. 'ஜீவனாம்சம்' படத்தில் வரும் விவாகரத்தில் நம்பிக்கையில்லாத ஒரு divorce லாயர்!
8. 'வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு ' (படம் என்ன 'பத்தாம் பசலி' யா ?)
9. 'இரு கோடுகள்' இல் பாரதியார்!
10. கமலின் 'கடல் மீன்கள்'

சொல்லிக் கொண்டே போகலாம்

நன்றி!

சினிமா விரும்பி

பெயரில்லா சொன்னது…

Madam Susila,

வேறு ஒரு வலைத்தளத்தில் (http://raviswaminathan.blogspot.com ) நாகேஷ் பற்றிய பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம் கீழே:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....