துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.3.11

’கதா’வில் ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல்..

கீதா தர்மராஜன் என்பவரால் (1989ஆம் ஆண்டில்) புது தில்லியில் துவங்கப்பட்ட
  ’கதா என்னும் தன்னார்வ அமைப்பு,குழந்தைகள் நலனிலும் முன்னேற்றத்திலும் சமூக வளர்ச்சித் திட்டத்திலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறது.
’கதா’ என்னும் தனது பெயருக்கேற்ப,  நல்ல கதைகள் மற்றும் நூல் வாசிப்புக்களை அடித்தளமாகக் கொண்டு சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுகோல் அளிப்பது கதாவின் குறிப்பிடத்தக்க தனித்தன்மையாக விளங்கி வருகிறது.
வாசிப்பை ஓர் இயக்கமாக்கியபடி, பிற பொது வாசகர்களிடம் நல்ல இந்திய மொழிக் கதைகளைக் கொண்டு செல்லும் பணியினையும்,அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடும் பணியினையும் கூட
மேற்கொண்டு தீவிரத் தளத்தில் செயல்பட்டு வருகிறது கதா.
ஒவ்வொரு ஆண்டு சிறந்த மாநிலமொழிக்கதைகளைத் தேர்வு செய்து அவற்றுக்கு விருதளித்துப் பெருமை சேர்ப்பதோடு அவற்றின் தொகுப்பையும் கதா வெளியிட்டு வருகிறது.
(ஜெயமோகன்,இந்திரா பார்த்தசாரதி,உமாமஹேஸ்வரி ஆகியோர் கதா விருது பெற்ற சில தமிழ் எழுத்தாளர்கள்.)

இம்மாதம் 12ஆம் தேதி சனிக் கிழமை மாலை (3:30 முதல் 5:30 வரை )
கதா வாசகர் வட்டம் ,டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் முதலிய கதைகள் (கதா வெளியீடு) குறித்த விவாத அரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
ஜெயகாந்தன் சிறுகதைகள் தொடர்பான விவாதங்களைத் தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பை நானும்,பேராசிரியர் நாச்சிமுத்து அவர்களும்(ஜே.என்.யூ பல்கலை) ஏற்றிருக்கிறோம்.
கதை ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
நிகழ்விடம்,நேரம் குறித்த முறையான அழைப்பிதழ் ....கீழே..
கதாவிலிருந்து...
Katha has been striving to defy onslaught of mass monoculture and has been publishing and promoting excellent translations of outstanding Indian regional literature for adults and children.
 As yet another active step towards promoting our “bhasha” literature

Katha Reading Club invites you
to a reading and literary discussion on Dissonance and Other Stories
by the iconoclast storyteller Jayakanthan
translated from the Tamil by Dr K S Subramanian
Discussions in this Literary forum will be presided  by 
Dr. Nachimuthu, Professor of Tamil, Chairperson of Indian Languages, School of Languages, Literature and Cultural Studies, Jawaharlal Nehru University 
and by Dr. M.A. Susila
                           
The programme will be on the 12th  of March from  3.30:PM – 5:30 PM at Katha StoryShop, A3 Sarvodaya Enclave, Sri Aurobindo Marg, New Delhi 17


1 கருத்து :

suneel krishnan சொன்னது…

விழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள் அம்மா ..
நீங்கள் மீனாட்சி புத்தக நிலையம் பொன்விழா வாழ்த்து எழுதிய பதிவில் ஸ்லாகித்து எழுதிய ஜெயகாந்தன் புத்தகங்களை தேடி வாங்கி வாசித்து வருகிறேன் ,இப்பொழுதைக்கு ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ,சினிமாவுக்கு போன சித்தாளு வாசித்து முடித்து உள்ளேன் ,அவருடைய எந்த படைப்புகளை நான் வாங்குவது என்று குழப்பில் இருந்த நேரம் -உங்கள் பதிவு எனக்கு உதவியது .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....