‘அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ நாவல் குறித்து தினமலர் நாளிதழ்- திருச்சி, வேலூர் பதிப்புக்களில் வெளியான விமரிசனக்குறிப்பு.
தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
30.4.24
25.9.23
தினமலர் நேர்காணல்
24.09.2023 தினமலர் ஞாயிறு சிறப்புப்பகுதியில் என் நேர்காணல்
இது மொழியாக்கத்தின் பொற்காலம்: எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா .
https://m.dinamalar.com/detail.php?id=3439620
20.1.15
தினமலர் இதழில்....
பெண்ணிய சிறுகதைகளால், தமிழ் இலக்கிய வாசகர்களை கவர்ந்தவர் எழுத்தாளர் எம்.ஏ.சுசீலா. புகழ்பெற்ற உலக இலக்கியமாக விளங்கும், தாஸ்தயெவ்ஸ்கியின், 'கிரைம் அண்ட் பனிஷ்மென்ட்' மற்றும் 'இடியட்' ஆகிய இருநாவல்களையும், தமிழில் மொழிபெயர்த்தவர். தன் சுய படைப்பாக 10க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள், பல விருதுகளை பெற்றுள்ளன. மதுரை பாத்திமா கல்லுாரியின் தமிழ் பேராசிரியராகவும், துணைமுதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்று, தற்போது கோவையில் வசித்து வருகிறார்.
பெண்களின் படைப்பில் தாய்மையும், அன்பும் உச்சமாக வெளிப்பட வேண்டும் என விரும்பும் இவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
பாரதியின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். கல்லுாரியில் படிக்கும் காலத்தில், சிறுகதைகள் நாவல் வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. ஜெயகாந்தனின் கதைகளை விரும்பி படித்தேன். இந்த வாசிப்பு பழக்கம் என்னையும் எழுத துாண்டியது.கடந்த, 1979ம் ஆண்டு, 'கல்கி' வார இதழ் நடத்திய சிறுகதை போட்டியில், 'ஒரு உயிர் விலை போகிறது' என்ற என் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அறிமுக எழுத்தாளர் என்ற வாசகத்துடன், அதை பிரசுரித்தனர். அதுதான் நான் எழுதிய முதல் கதை.
இந்த உற்சாகத்தில், தொடர்ந்து எழுதினேன். பல பத்திரிகைகளில், என் கதைகள் வெளிவந்தன. பிறகு சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வந்தன. என் கதைகளில், பெரும்பாலும் பெண்ணியம், பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் மைய கருவாக இடம் பெறும். கல்லுாரி பணியில் இருந்த காலத்தில் அதிகம் எழுத முடியவில்லை. ஓய்வுக்கு பிறகு நேரம் அதிகம் கிடைத்தது. அதனால், மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டேன்.தாஸ்தயெவ்ஸ்கியின், 'குற்றமும் தண்டனையும்' நாவலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தேன். இந்நாவல் உலக அளவில் பல மொழிகளில் மொழியெர்க்கப்பட்டுள்ளன. இதை தமிழில் வாசித்த எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, சி.மோகன் போன்றவர்கள் என் மொழி பெயர்ப்பை பாராட்டினர். தமிழ் வாசகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து, தாஸ்தயெவ்ஸ்கியின், 'இடியட்' நாவலையும் 'அசடன்' என்ற பெயரில் மொழி பெயர்த்தேன். இதில், பிரெஞ்ச் மொழிக்கலப்பு அதிகம் இருந்ததால், மொழி பெயர்க்க சிரமமாக இருந்தது. அதனால், மொழிபெயர்த்து முடிக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகின. இந்த நாவலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது; மூன்று விருதுகளும் கிடைத்துள்ளன. பெண்கள் படைப்பாளர்களின் எழுத்து கலைத்தன்மையுடன், சமூகப்பயன்பாடுடன் இருக்க வேண்டும். கதை என்பது வாழ்க்கையின் தரிசனமாக இருக்கவேண்டும். அதில், தாய்மையும், அன்பும் உச்சமாக வெளிப்படவேண்டும். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் எழுத்துக்களில், அவை வெளிப்பட்டன. இன்றைய பெண் எழுத்தாளர்கள் தங்களின் சுயத்தையும், அக வெளிப்பாடுகளையும் எழுதுகின்றனர். அதில், பாலியல் தன்மையே அதிகம் வெளிப்படுகிறது. அதை தவிர்ப்பது நல்லது.
7.6.13
தினமலரில் ‘அசடன்’
அசடன் நாவல் மொழிபெயர்ப்புக் குறித்து
2.6.2013 தேதியிட்ட ‘தினமலர்-வாரமலர்’ இதழில் புத்தக மதிப்புரை பகுதியில் வெளியாகியிருக்கும் சிறு குறிப்பு
http://books.dinamalar.com/details.asp?id=22356
பிடித்தவை
2.6.2013 தேதியிட்ட ‘தினமலர்-வாரமலர்’ இதழில் புத்தக மதிப்புரை பகுதியில் வெளியாகியிருக்கும் சிறு குறிப்பு
http://books.dinamalar.com/details.asp?id=22356
அசடன்
விலைரூ.650
ஆசிரியர் : ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
வெளியீடு: பாரதி புக் ஹவுஸ்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பக்கம்: 672
இந்த நாவல், பியோதர் தஸ்தயேவ்ஸ்கியால் 1869ல் எழுதப்பட்ட, "த இடியட் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. திருமதி.எம்.ஏ.சுசீலாவால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.இந்த நாவல் பல சிறப்புடையது. அதாவது, முழுமுற்றான தீமை என்பது, இல்லவே இல்லை என, தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய நாவல் அனைத்திலும் சொல்லி வந்தாலும், முழுமுற்றான நன்மையை, இந்த கதையின் நாயகனான மிஷ்கின் மூலம் படைக்க முற்பட்டார். அதில் வெற்றியும் கண்டார்.
இன்று வரை, லட்சியவாத கதாபாத்திரங்களின் பிரதிநிதியாக மிஷ்கினையே சுட்டுவர் இலக்கியவாதிகள். கரமாசாவ் சகோதரர்களில் வரும் அல்யேஷாவை விட, இவன்நல்லவன் அதனால் தான், நல்லவனுக்கு இந்த உலகம் வைத்திருக்கும் பெயரையே நாவலுக்கு தலைப்பாக்கினார் தஸ்தயேவ்ஸ்கி.
தஸ்தயேவ்ஸ்கியை போன்றவர்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிரமம் அதிகம். திருமதி. சுசீலாவின் மொழிபெயர்ப்பு மிக லகுவாக, கதையோடு நாம் பயணிக்கும் விதமாய் உள்ளது. இலக்கிய ஆர்வம் உள்ள எவரும், தவறவிடக்கூடாத நூல் இந்த "அசடன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)




