அசடன் நாவல் மொழிபெயர்ப்புக் குறித்து
2.6.2013 தேதியிட்ட ‘தினமலர்-வாரமலர்’ இதழில் புத்தக மதிப்புரை பகுதியில் வெளியாகியிருக்கும் சிறு குறிப்பு
http://books.dinamalar.com/details.asp?id=22356
அசடன்
ஆசிரியர் : ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
வெளியீடு: பாரதி புக் ஹவுஸ்
பகுதி: கதைகள்
ISBN எண்:
பக்கம்: 672
இந்த நாவல், பியோதர் தஸ்தயேவ்ஸ்கியால் 1869ல் எழுதப்பட்ட, "த இடியட் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. திருமதி.எம்.ஏ.சுசீலாவால் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.இந்த நாவல் பல சிறப்புடையது. அதாவது, முழுமுற்றான தீமை என்பது, இல்லவே இல்லை என, தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய நாவல் அனைத்திலும் சொல்லி வந்தாலும், முழுமுற்றான நன்மையை, இந்த கதையின் நாயகனான மிஷ்கின் மூலம் படைக்க முற்பட்டார். அதில் வெற்றியும் கண்டார்.
இன்று வரை, லட்சியவாத கதாபாத்திரங்களின் பிரதிநிதியாக மிஷ்கினையே சுட்டுவர் இலக்கியவாதிகள். கரமாசாவ் சகோதரர்களில் வரும் அல்யேஷாவை விட, இவன்நல்லவன் அதனால் தான், நல்லவனுக்கு இந்த உலகம் வைத்திருக்கும் பெயரையே நாவலுக்கு தலைப்பாக்கினார் தஸ்தயேவ்ஸ்கி.
தஸ்தயேவ்ஸ்கியை போன்றவர்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிரமம் அதிகம். திருமதி. சுசீலாவின் மொழிபெயர்ப்பு மிக லகுவாக, கதையோடு நாம் பயணிக்கும் விதமாய் உள்ளது. இலக்கிய ஆர்வம் உள்ள எவரும், தவறவிடக்கூடாத நூல் இந்த "அசடன்.
1 கருத்து :
அசடன் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
கருத்துரையிடுக