துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.9.10

மூடித் திறந்த இமையிரண்டும்....

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, விடைத்தாள் திருத்தப் போன இடத்தில் வாய்த்த வேடிக்கையான அனுபவம் ஒன்று.

தமிழ் இலக்கணத்தில் எப்போதுமே தற்குறிப்பேற்றத்துக்குத் தனியான ஓரிடம் உண்டு..
இயற்கையாக...தன்னிச்சையாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்குள்

23.9.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4

பெண்ணுரிமை இயக்க வரலாறு...சுருக்கமும்,விரைவுமான பார்வையில்..

பெண்ணுரிமை என்பது ஓர் இயக்கமாகவும்,கோட்பாடாகவும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது.இக் காலகட்டத்தில் வாழ்ந்த காண்டார்செட் (Condorcet )என்னும் தத்துவ அறிஞர் , இக் கோட்பாட்டுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருப்பதைஅறியமுடிகிறது.
18,19 ஆம் நூற்றாண்டுகளில் ,

17.9.10

உலைக்களமாகும் உள்ளம்...

சங்கப் பாடல்களிலுள்ள பல உவமைகள் அரிதானவை;அபூர்வமானவை.
கவிஞனின் வலிந்த முயற்சி எதுவுமின்றி இயல்பான வாழ்க்கைத் தளத்திலிருந்து தன்னிச்சையாக ஜனித்து வருபவை.


கச்சிப்பேட்டு நன்னாகையாரின் குறுந்தொகைப் பாடல் ஒன்று.
திருமணத்துக்காகப் பொருள் தேடப் பிரிந்திருக்கிறான் தலைவன்.
(அவனது பிரிவுக்குப் பிற காரணங்களும் இருக்கக் கூடும்;இது உரையாசிரியர்கள் கூறும் காரணம் மட்டுமே)
’காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் காதல்’துயரமும் அதன் தனிமை ஏக்கமும் தலைவியை வாட்டியெடுக்கின்றன.

15.9.10

ஆர்.சூடாமணிக்கு அஞ்சலி



தமிழ்க் கதை உலகில் ஆரவாரமில்லாத அழுத்தமும்,அமைதியும் கூடிய பல தரமான சிறுகதைகளையும் நாவல்களையும் தந்திருக்கும் ஆர்.சூடாமணி அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது.

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை உடல்நலக் குறைவு காரணமாகப் படுக்கையிலேயே கழிக்க நேர்ந்த சூடாமணிக்கு வாசிப்பும்,எழுத்தும் மட்டும்தான் வெளி உலகின் ஜன்னல்களாக இருந்து கொண்டிருந்தன.அது குறித்த கழிவிரக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு ‘மானுட அம்சம்’பற்றிய கரிசனையோடு தனது எழுத்துக்களைச் செதுக்கிக் கொண்டிருந்தவர் அவர்.

சூடாமணி முன் வைக்கும் பெண் குறித்த நிலைப்பாடு சமரசங்கள் அற்றது;

13.9.10

’’போறாளே பொன்னுத்தாயி...’’

நெஞ்சின் அடியாழம் வரை ஊடுருவிக் கலந்து - இனம்புரியாத சுகமானதொரு கிளர்ச்சியை உண்டாக்கும் அற்புதத் தேன்குரலுக்குச் சொந்தக்காரரான சொர்ணலதாவின் மறைவு இசை விரும்பிகளுக்கு ஒரு பேரிழப்பு.


சொர்ணலதாவின் உச்சரிப்பில் பி.சுசீலாவின் உச்சரிப்பைப் போன்ற தெளிவும் ,துல்லியமும் இணைந்திருக்கும்;
பாடலின் ஒரு சொல்லைக்கூட நாம் நழுவ விட்டு விட முடியாதபடி..அதே வேளையில் ..மிக மிக உணர்ச்சிகரமாகக் கேட்பவர்களை வந்தடைவது அந்த அபூர்வக் குரல்.

11.9.10

பாரதியின் விநாயகர் நான்மணிமாலை


பாரதியின் நினைவு நாளில்....

பாரதியின் விநாயகர் நான்மணிமாலை ,தோத்திரப் பாடல் வரிசையில் சேர்க்கப்பட்டிருந்தாலும்.....தோத்திரப் பாக்களின் சில கூறுகள் அதில் தென்பட்டாலும் முழுக்க முழுக்கத் தோத்திரத் தன்மை கொண்டதென்று அதைக் கூறிவிட முடியாது.

கணபதிராயனின் காலைப் பிடித்தாலும்,கண்ணனை உச்சி மீது வைத்துக் கொண்டாடினாலும்,காளியின் காலடியில் தவமாய்த் தவம் கிடந்தாலும் ’ஒன்றே பரம்பொருள் என்ற தீர்க்கமும் தெளிவும் பெற்றவன் பாரதி

9.9.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3

’’சமூகத்திலும், வேலைத் தளத்திலும்,குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்கு முறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்ணின் உணர்வு நிலைகளும்,இந்நிலையை மாற்ற ஆண்களும் ,பெண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கைகளுமே பெண்நிலை வாதம்’’
(தென்னாசியப் பெண்கள் பயிலரங்கில் முன்மொழியப்பட்ட கருத்து


காலந்தோறும் , சூழல்தோறும் பல்வேறு பரிமாணங்கள் பெற்றபடி விரிவும் அழுத்தமும் கூடியதாய் வளர்ந்து வருவது பெண்ணியம் என்னும் இக் கருத்தாக்கம் என்பதை நினைவில் கொண்டு அனைத்துத் தளங்களுக்கும் பொருத்தமான - ஏற்புடையதான ஒரு விளக்கத்தைச் சற்று விரிவாகவே அமைத்துக் கொள்ளலாம்.
தாய்வழிச் சமூக அமைப்பு , தந்தைவழிப்பட்டதாய் மாற்றமுற்றபின் குடும்பம்,பொருளாதாரம்,அரசியல்,மதம் என முதன்மையான சமூக நிறுவனங்கள் (social institutions)அனைத்தையும் ஆண்களே கையகப்படுத்திக் கொண்டதோடு அவற்றில் மேல்நிலை பெறவும் தொடங்கினர். 

7.9.10

சூழியலும் பிராய்லர் கடையும்

 தலைப்பைக் கண்டு மலைப்பவர்கள் முதலில் செய்தியைச் சற்று நிதானமாகப் படியுங்கள்....

இறைச்சி விற்பனைக் கூடங்கள் என்றாலே அவை சுற்றுச் சூழலை நாசப்படுத்துபவைதான் என்பது நம் பொதுப் புத்தியில் வெகு காலமாகப் படிந்து போயிருக்கும் கருத்துருவாக்கம்.
ஆனால் அதற்கு நேர்மாறாக 5/9/10 தேதியிட்ட தினமலரில் வெளியாகியிருக்கும் கீழ்க்காணும் செய்தி மனதை நெகிழ்த்தி விட்டது

5.9.10

கவிதையின் தருணம்


வரகவிகளும், உலக மகா கவிகளும் கூடத் தங்களில் கவிதை நிகழப் போகும் அற்புதமான அந்தக் கணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பவர்களே.
காரணம்...சொற்களை வெறுமே பிண்டம் பிடித்து வைத்து விடுவதால் மட்டும் கவிதை உருவாகி விடுவதில்லை என்ற சூட்சுமத்தை அவர்கள் புரிந்து வைத்திருப்பதுதான்.

கடும் கோடையில் புழுங்கித் தவிக்கையில் எங்கிருந்தோ ஒரு கணம் வந்து இதமாக முகத்திலறைந்து விட்டுப் போகும் குளிர் தென்றலைப் போல்.....,
பனிநீராகத் தெளிக்கும் மழையின் மிகச் சிறு திவலையைப் போல்....,
சற்றும் எதிர்பாராத ஒரு வேளையில்
எங்கோ தொலைதூரத்தில் மலர்ந்த ஏதோ ஒரு பூவின் மணம் நாசிக்குள் ஊடுருவிக் கொண்டு போவதைப் போல்
கவிதையும் ‘சட்’டென்று ஒருகணப்பிடிமானத்தில் சம்பவிக்கிறது.

2.9.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2

’’மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய 
குறிக்கோள்


பெண்ணியம் என்ற கோட்பாட்டின் ஆணிவேராக அமைந்திருப்பவை , பல ஆழமான சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணங்கள்.
அவற்றை அடிமுடி கண்டு ஆய்ந்து தெளியாமல் மேலோட்டமாக அதிகம் பேசிவிட்டதனாலேயே பெண்ணியத்தின் எல்லாப் பரிமாணங்களையும் விவாதித்து முடித்து விட்ட உணர்வும்,இனிமேல் அது பற்றி விவாதிக்க எதுவுமில்லை என்ற மன நிலையும் மெத்தப்படித்த மனிதர்களையும் கூட இன்று பீடித்திருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....