துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.3.11

வழி காட்டும் மதுரை...!


       ’’வாக்குப் பொறுக்கிகளின் சந்தை இரைச்சல்களுக்கு நடுவிலிருந்து,
சத்தியத்தின் வீரியம் மிக்க குரல் ஒன்று மதுரை மண்ணிலிருந்து ஒலித்திருக்கிறது.’’

தேர்தல் களம்!
கறுப்பு வெள்ளைப் பணமெல்லாம் வெள்ளமாகப் பாய்ந்தோடும் காலகட்டம்!
பணக் கவரை மறைவாக நீட்டி விட்டு
அல்லது ஆரத்தியில் போட்டுவிட்டுக் கற்பூரம் ஏற்றிச் சத்தியம் வாங்கிக் கொள்கிறது ஒரு கூட்டம்!
பணத்தை எதிர்த் தரப்பிலிருந்து வாங்கிக் கொண்டு ஓட்டை மட்டும் எங்களுக்குப் போட்டு விடுங்கள் என்கிறது இன்னொரு கூட்டம்.
வாக்குப் பொறுக்கிகளின் இந்தச் சந்தை இரைச்சல்களுக்கு நடுவே
சத்தியத்தின் வீரியம் மிக்க குரல் ஒன்று மதுரை மண்ணிலிருந்து ஒலித்திருக்கிறது.

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’
எனத் தட்டியில் எழுதி வீட்டின் முகப்பில் தொங்கவிட முன் வந்திருக்கிறார் ஒரு மனிதர்.
அரசுப் பணியில் இருந்தபோதும் அஞ்சி அஞ்சிச் சாகாமல் துணிவுடன் எழுது நிற்கும் இவரது கம்பீரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இவரைப் போலவே பொருள் பெறாமல் வாக்களிக்கும் பலரும் இருக்கக் கூடும்.
எனினும் துணிவான ஒரு பிரகடனம் போலத் தன் வீட்டு வாசலில் எழுதி வைத்து இவர் அதை அறிவித்திருப்பது ஒரு புதுமைதான்!
எவரையும் எளிதாக வீழ்த்தப் பண மாயை ஒன்றே போதும் என்ற மலிவான எண்ணம் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு
 ’மறுபக்கம்’ என்ற ஒன்றும் இருக்கிறது என்பதையும்,
 தன்மானத்தை-சுய கௌவரவத்தை அடகு வைத்து விட்டுப் பணத்தின் முன் எல்லோரும் மண்டியிட்டு விடுவதில்லை என்பதையும் அவரது செயல் எடுத்துக் காட்டியிருக்கிறது.

தீமைகள் மிக விரைவாகத் தொற்றிக் கொள்வது இயல்புதான்!
ஆனால்...நல்லெண்ணங்களுக்கும் ,நற்செயல்களுக்கும் கூட அந்த வலிமை உண்டு என்பதை இவரைத் தொடர்ந்து அந்தத் தெருவிலுள்ள பலரும் தங்கள் வீட்டு முகப்பில் இவ்வாறு எழுதி வைக்க முன் வந்திருப்பது நிரூபித்துக் காட்டுகிறது.
தெருக்கள் ஊராக...
ஊர்கள் மாநிலமாக...
மாநிலங்கள் நாடாக..
விழிப்புணர்வு வளர்ந்து கொண்டே போக....
எளிமையான தனது அறத்தின் சாட்சியத்தால்
பலருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக அமைந்த 
திரு ஜான் என்னும் அந்தப் பண்பாளருக்கு வாழ்த்துக்கள்!
அவர் பற்றிய தினமலர்-30/3/11 செய்திக் குறிப்பு..கீழே;
3 கருத்துகள் :

Pranavam Ravikumar சொன்னது…

ரொம்ப நல்ல இருக்கு.. வாழ்த்துக்கள்!

அப்பாதுரை சொன்னது…

பாராட்ட வேண்டிய செயல். பின்பற்றுகிறோமோ இல்லையோ..

www.eraaedwin.com சொன்னது…

வணக்கம் தோழர். மிகச் சரியாய் நச்சென செய்திருக்கிறார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....