பிரியத்திற்குரிய ஒரு மகளாகவே வரித்து நான் அன்பு செய்யும் என் மாணவி தேனம்மை லட்சுமணன் எழுத்தில் திண்ணை இணைய இதழில் வெளியாகியிருக்கும் என் ‘தேவந்தி’சிறுகதைத் தொகுப்புக் குறித்த ஒரு ரசனைப்பார்வை...
எம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை
இணைப்பு;
4 கருத்துகள் :
தேனம்மை லெக்ஷ்மணன்அவுங்க, தேவந்தி கதை பத்தி எழுதி இருந்தது சந்தோசமா இருந்துச்சு .மாணவியா தயங்கித் தயங்கித் , பயந்துக்கிட்டே உங்ககூட பிரச்சினை வந்துடக் கூடாது முன்ஜாக்கிரதையோட எழுதி முடிச்சு இருக்காங்க இல்லையா மேடம்.
திரு சரவணகுமார்,தங்கள் கருத்துக்கு நன்றி.ஆனாலும் இங்கு ஒன்றை நான் குறிப்பிட்டாக வேண்டும்.எங்கள் ஆசிரிய-மாணவ உறவு அவ்வாறு பயத்தின் மீது கட்டமைக்கப்பட்டதாக இல்லை;அது அன்பின் அடித்தளம் கொண்டது.அதனால்தான் ‘80களில் படித்த அந்த மாணவியின் அன்பு இன்னும் தொடர்கிறது.இன்னும் ஒன்று...வகுப்பறையில் பாடம் எடுப்பதிலிருந்து-நான் எழுதும் பேசும் எல்லாவற்றையும் எப்போதும் விமரிசிக்கும் சுதந்திரத்தையும் என் மாணவியருக்கு நான் கொடுத்தே வந்திருக்கிறேன்.எனவே என்னிடம் எவ்விதத் தயக்கமோ பயமோ அவர்களுக்கு ஒருபோதும் விளைந்ததில்லை.
ரொம்ப சரியா சொன்னீங்கம்மா. விமர்சனம் பண்றத விட அதில் ஒப்புக் கொள்ளவேண்டிய கருத்துக்கள் அதிகம் இருந்ததே உண்மை..
சரவணகுமார் என்னுடைய விமர்சனத்தில் நான் ரசனைப்பார்வை என்றே குறிப்பிட்டு இருக்கிறேன். :)
//எம்.ஏ.சுசீலா கூறியது...
எனவே என்னிடம் எவ்விதத் தயக்கமோ பயமோ அவர்களுக்கு ஒருபோதும் விளைந்ததில்லை. //
அருமை!அருமை!....மேடம்.
//Thenammai Lakshmanan கூறியது...
விமர்சனம் பண்றத விட அதில் ஒப்புக் கொள்ளவேண்டிய கருத்துக்கள் அதிகம் இருந்ததே உண்மை.//
அக்கா,தேவந்தி கதை மட்டுமே படிச்சிருக்கேன்.
// சரவணக்குமார் என்னுடைய விமர்சனத்தில் நான் ரசனைப்பார்வை என்றே குறிப்பிட்டு இருக்கிறேன். :)//
கவனிச்சேன்..க்கா.மனச கஷ்டபடுத்தி இருந்தா மன்னிச்சிகோங்க.
கருத்துரையிடுக