ஒரு சிறிய பகிர்தல்....
இன்று காலை தற்செயலாக ஈரோடு வழக்கறிஞரும் ‘சோளகர் தொட்டி’நாவலின் ஆசிரியருமான ச.பாலமுருகன்,பொதிகை தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்முகத்தைக்காண நேர்ந்தது.
‘சோளகர் தொட்டி’, ஆதிவாசி பழங்குடி மக்களின் உரிமைப் பறிப்பு சார்ந்த அற்புதமான ஒரு நாவல்.அதை எழுதிய அனுபவத்தைச் சொல்லிக்கொண்டு வந்த திரு பாலமுருகன் தன் பேச்சுக்கு நடுவே வங்க எழுத்தாளர் மஹாஸ்வேதாதேவியோடு தொடர்புடைய சுவையான ஒரு சம்பவத்தையும் விவரித்தார்.
ஆதிவாசிப் பழங்குடி மக்கள் குறித்தும்,மனித உரிமைகள் பற்றியும் மிகுதியாக எழுதியும் பேசியும் வந்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் அந்த நிலைப்பாட்டோடு கூடிய தீவிரக்களச் செயல்பாட்டாளராகவும் விளங்கிய ஒரு சமூகப்போராளி [social activist]மஹாஸ்வேதாதேவி.
இந்தியக்குடியரசுத் தலைவரின் கரங்களால் மஹாஸ்வேதாதேவி ஞானபீட விருது வாங்கவிருந்த மகத்தான ஒரு தருணம் ; அதே நேரத்தில்...ஆந்திரச் சிறையில் மறுநாள் தூக்குதண்டனைக்குக் காத்திருக்கும் மூன்று பேர்.
மரணதண்டனை என்பது மனித உரிமைக்கு எதிரானது என்ற கருத்தைக்கொண்டிருக்கும் முதுபெரும் எழுத்தாளர் மஹாஸ்வேதாதேவி, அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடமிருந்து ஞானபீட விருதைப்பெற்றுக்கொள்வதற்கு முன் ‘’நானும் உங்களுக்கு ஒன்று தர விரும்புகிறேன்’’என்று கூறியபடியே ஒரு கடிதத்தை அவர் கையில் தருகிறார். புகழ்பெற்ற ஒரு படைப்பாளி தனக்குத் தரும் அந்தத் தாளைக் குடியரசுத் தலைவரும் ஆர்வத்தோடு வாங்கிக் கொள்கிறார். அது.... தூக்குக்கயிறை எதிர்நோக்கியிருக்கும் மூன்றுபேருக்காக மஹாஸ்வேதா தேவி அளித்திருக்கும் கருணை மனு. அதை உரிய இடத்தில் சேர்ப்பித்துவிட்ட நிறைவோடு அதன் பிறகே தனக்குரிய விருதைப்பெற்றுக் கொள்கிறார் அவர்,
கருணை மனு தரப்பட்டு விட்டால் அதன் மீது முடிவு அறிவிக்கப்படும்வரை தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்பது சட்டம்; கருணை மனு தரப்பட்டிருக்கும் செய்தி உச்ச நீதிபதியை அடைந்து - குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை தண்டனையை நிறுத்தி வைக்கும் நீதிமன்றஉத்தரவு விடியற்காலை 3 மணிக்கு சிறையை வந்தடைகிறது.காலை 4.30க்கு மரணத்தின் வாயில் திறக்கப்போகிறது என நினைத்துக் கொண்டிருந்த குற்றவாளிகள் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள்.
அதன் பிறகு ஒரு இடைவெளிக்குப் பின் அந்த மனுவைப்பரிசீலித்த
குடியரசுத் தலைவர் அந்தக்குற்றவாளிகள் செய்திருப்பது கொலையே என்றாலும் அதற்கு மரணதண்டனை தேவையில்லை என முடிவெடுத்து அதை ஆயுள் தண்டனையாக மாற்றுகிறார்....
இந்த நிகழ்வை பாலமுருகன் விவரித்தபோது மனம் நெகிழ்ந்து சிலிர்ப்படைந்தேன்...
ஒரு முறை பிரபலமான ஓர் எழுத்தாளரின் சொற்பொழிவைக்கேட்க நேர்ந்தது. ’’எழுதுவது மட்டும்தான் என் வேலை...தெருவில் எவன் எவளை பலவந்தம் செய்தாலும்,ஒருவர் இன்னொருவரைக் கொன்றே போட்டாலும் அது பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என் வேலை அது இல்லை’’என்றார் அவர். எனக்கு அது உடன்பாடானதாக இல்லை. பேனா முனை வாள்முனையை விடக்கூர்மையானதுதான்......ஆனாலும் அந்தப்பேனாவை வாள் போலக்கூரியதாக்குவது , அதற்குப் பின்புலமாக நின்று அதைப்பட்டை தீட்டி மெருகேற்ற வேண்டியது அந்த எழுத்தாளனிடம் சுரந்தாக வேண்டிய அலகிலாக் கருணையும்,அளவிட முடியாத மனித நேயமுமேயல்லவா?அவற்றைத் துறந்த வறட்டு எழுத்துக்கும் கடலில் பெய்யும் மழைக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
அனுமனுக்குத் தன் பலம் தெரியாது என்று சொல்வதைப்போல எழுத்தாளனுக்கு இருக்கும் வலிமை அவனுக்கே தெரிவதில்லை என்றும், அப்படியே தெரிந்திருந்தாலும் அதைச் செயல்படுத்தும் முனைப்பு சிலருக்கு விளைவதில்லை என்றுமே தோன்றுகிறது...
எழுதுவது மட்டும்தான் என் வேலை...என்று எண்ணியபடி...ஞானபீடப்பரிசை மட்டும் வாங்கிக்கொண்டு அன்று மேடையை விட்டு மஹாஸ்வேதாதேவி இறங்கிப்போயிருந்தால்....தூக்குக்கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த மூன்று பேரின் உயிரைக்காத்த மகத்தான செயலை அவரால் சாதித்திருக்க முடியுமா....?
ஞான பீடம் பெறுவது உயர்வானதுதான்...! ஆனால்...எத்தனையோ ஞான பீடங்களையும் விட உன்னதமான மனித அறத்தையும் மனித மாண்பையுமல்லவா சிறியதொரு செயலின் வழியாக அவர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்?

பி.கு;
அதற்காக,எழுத்தாளன் என்பவன் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு வீதியில் இறங்கிப்போராட வேண்டும் என்றோ...களப்பணியில் இறங்கவேண்டும் என்றோ நான் சொல்லவில்லை.
அது எல்லாச் சூழல்களிலும் அசாத்தியமானது ,பொருந்தி வராதது என்பதை நானும் அறிவேன்...
ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்ததைப்போலத் தன்னால் முடியும் சந்தர்ப்பங்களில் முக்கியமான ஒரு பிரச்சினையை உரிய இடங்களில்,உரிய தருணங்களில் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களின்போது கவனப்படுத்தவாவது செய்யலாம்தானே..?
அதைத்தான் அவரும் செய்திருக்கிறார்..?
அதைக் கூடச் செய்யாமல் எழுத்தை ஒரு திமிராக மட்டுமே கொண்டு சிலர் இருக்கிறார்களல்லவா...
அதைச் சுட்டிக் காட்டுவதே இப்பதிவின் நோக்கம்.