23.5.09
நைநிடால் பயணத் துளிகள் - 1
உத்தரகண்ட் மாநிலத்தின் மலைத்தொடர்களுக்கிடையே அமைந்திருக்கும் நைநிடால் , பீம்டால் , அல்மோரா ,பின்சார் ஆகிய இடங்கள், பல இயற்கை வளங்களை,அழகுகளை , அதிசயப்புதிர்களைத் தங்களுக்குள் செறித்து வைத்திருப்பவை. 'மிடில் ஹிமாலயாஸ்' என அழைக்கப்படும் இந்த இடை இமயப் பகுதிகளில் பயணிப்பது பல ஆனந்த அனுபவங்களைக் கிளர்த்தக் கூடியது.
ஒரு காலத்தில் அமைதிக்கும் , தியானத்திற்கும் உரிய இடமாக நைநிடால் இருந்திருந்தாலும், இன்று அங்கும் நுகர்வுக் கலாச்சாரத்துடன் கூடிய சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பெருகிப் போய்க் கிடப்பதால் , அங்கிருந்து பிற பகுதிகளுக்குப் பயணப்படுகையிலேதான் உண்மையான இயற்கை அழகை நுகர முடியும்.
வித விதமான வண்ணம் கொண்ட கூழாங்கற்களை, இமயப் பிஞ்சுகளை அடித்துக்கொண்டு வரும் கோசிநதி (பீஹாரின் கோசி அல்ல) , குறிப்பிட்ட சில மலைப் பாதைகளில் வாகனத்தை விட்டுச் சற்றே கீழிறங்கிப் பார்த்தால் தூரத்திலிருந்து தரிசனமாகும் வெள்ளிப் பனி இமயம் -அதன் திரிசூல்,நந்தாதேவி சிகரங்கள் -நிலவியலமைப்பு மாற மாற, ஓக் என்றும் தேவதாரு என்றும் மாறிக்கொண்டே வரும் மரக்கூட்டங்கள் என்று வற்றாத பிரபஞ்சத்தின் பேரழகை நெஞ்சு முழுக்க நிரப்பிக் கொண்டு விடலாம். .குறிப்பாக நைநிடாலிலிருந்து அல்மோரா செல்லும் பயணம் மிக அற்புதமானது .அப்பயணத்தின் சில காட்சிகள், நான் எடுத்த புகைப்படங்கள் வழியே.........
நைநிடால் ஏரி.ஒரு காலத்தில் அத்திரி,புலஸ்தியர்,புலஹர் ஆகிய மூன்று முனிவர்களும் ஏரிக்குமேலுள்ள மலைத் தொடரில் தவம் செய்த காரணத்தால் 'திரி ரிஷி சரோவர்' என்ற பெயரும் இந்த ஏரிக்கு உண்டு.
ஏரிக்கரையை ஒட்டி அமைந்திருக்கும் நைனாதேவி ஆலயம்
வெள்ளிப் பனிமலையின் தரிசனம்
கோசி நதி
நைநிடால் விலங்கியல் காட்சியகத்தில் அடைக்கப்பட்டுள்ள ஆட்கொல்லிப்புலியும், வெண்மயிலும்
அல்மோரா செல்லும் வழியில் மலைத்தொடர் அமைப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக