துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.7.09

வலைக்கு ஒரு அன்பான அங்கீகாரம்

முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ் .ஆர் கலை அறிவியல் கல்லூரி , திருச்செங்கோடு ,
நாமக்கல்மாவட்டம்.
http://gunathamizh.blogspot.com/இரண்டு நாட்களுக்கு முன் கீழ்க் கண்டவாறு எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி வைத்திருந்தார்.

''தங்கள் தமிழ்ப்பணியைப் பாராட்டி
தங்களுக்குப் பட்டாம்பூச்சி விருதினை அளித்துள்ளேன்
(http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_16.html )
இவ்விருதினைத் தங்கள் வலைப்பதிவில் இட்டுக்கொள்ளவும்...
சிறப்பான வலைப்பதிவராகத் தாங்கள் கருதும் ஐவருக்கு இவ்விருதினை அளித்து அவர்களின் பணியைப் பாராட்டுங்கள்.....
நன்றி
தொடர்க தமிழ்ப்பணி...''
(திரு குணசீலனின் கடிதம்)

அதைக் கண்டதும் எனக்கு ஒரு வகையான கூச்சமே மேலோங்கியிருந்தது. நான் கடந்த ஒன்பது மாதங்களாகத்தான் வலை எழுத்தில் ஈடுபட்டுத் தனியே நீச்சலடித்துக் கரையேற முயன்று கொண்டிருக்கிறேன்.இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளும், பதிவு செய்தாக வேண்டிய கருத்துக்களும், கடக்க வேண்டிய தூரமும் நிறைய உள்ளன. எனினும் என் தமிழ் மீது கொண்ட அன்பாலும் மதிப்பாலும் அவர் தர முன் வந்திருக்கும் கௌரவத்தை மறுக்க மனம் வராததால் - முனைவர் திரு குணசீலனுக்கு என் நன்றிகளைக் கூறி அவரது வேண்டுகோளை ஏற்கிறேன்.அவர் அளித்த 'பட்டாம்பூச்சி' விருதினையும் வலையின் ஒரு பகுதியில் வெளியிடுகிறேன்.
த்மிழரசி என்னும் வலைப்பதிவர் தனக்களித்த இப்பெருமையினை மேலும் ஐவருக்குத் தான் அளிக்க முன் வந்திருக்கிறார் திரு குணசீலன்.
இவ்வாறு வலைப் பதிவர்கள் ஒருவருக்கொருவர் ஊக்குவித்துக் கொள்ளக் கையாளும் இவ் வழிமுறைகள் ஒருபுறமிருக்க..., நல்ல தமிழை, தமிழ் இலக்கியத்தை...விமரிசனத்தை வளர்த்துச் சமூகத்திற்கு ஆக்கம் தரும் ஊடகமாக இணையம் திகழ வேண்டும் என்பதே என் அவா.
பி.கு.
(திரு குணசீலன் எனக்களித்த இந்தப் பெருமையினை அவர் வழியில் நானும் வேறு ஐவருக்கு விரைவில் வழங்குவேன்).

2 கருத்துகள் :

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...
தங்கள் தன்னடக்கம் தங்கள் மீது நான் கொண்ட மதிப்பை மேலும் உயர்த்துவதாக உள்ளது...
தங்கள் தமிழ்ப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....

அன்புடன் மலிக்கா சொன்னது…

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அம்மா
தங்கள் தமிழ்ப்பணி தொடர மனம் நிறைந்த
மென்மேலும் பல விருதுகள் பெறவேண்டும்..

தாங்களின் சாந்த முகம் பிடித்துள்ளது..

அன்புடன் மலிக்கா

http://niroodai.blogspot.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....