புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் எழுத்தாளர்களாகிய
வவுனியூர் உதயணன்[லண்டன்,இங்கிலாந்து],
கலாநிதி ஜீவகுமாரன்[ஹோல்பெக்,டென்மார்க்],
வி.ரி.இளங்கோவன்[பாரீஸ்,ஃப்ரான்ஸ்]ஆகியோரின் படைப்புக்களை தில்லியில் வாழும் இந்திப்பேராசிரியரும்,சாகித்திய அகாதமி பரிசு பெற்ற மொழிபெயர்ப்பாளருமாகிய டாக்டர் ஹெச்.பாலசுப்பிரமணியம் அவர்கள் இந்தியில் மொழியாக்கம் செய்துள்ளார்.
அந்நூல்களின் வெளியீடும்,’ புலம் பெயர் இலக்கியக் குரல்கள்’ என்னும் கருத்தரங்கமும் 27/9/12 வியாழன் காலை 10 மணி அளவில் தில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் நிகழவிருக்கிறது.
குறிப்பிட்ட மூன்று படைப்பாளிகளும் பங்கு பெறும் இக்கருத்தரங்கில் நானும் பங்கேற்றுத் தலைமை உரை ஆற்றவிருக்கிறேன்.
எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதியின் ‘பவளாயி’நாவலை உஸ்பேக் மோழியில் மொழிபெயர்த்திருக்கும் தாஷ்கண்டைச் சேர்ந்த[உஸ்பெகிஸ்தான்] மக்தூபாமுர்தஸா கோத்ஜேவா அவர்களும் இக்கருத்தரங்கில் -ஒரு மொழிபெயர்ப்பாளராகத் தன் அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இவ்வரங்கிற்கு வருகை தந்து சிறப்பிக்கலாம்.

2 கருத்துகள் :
விழா சிறப்புற வாழ்த்துக்கள்!
GREAT...GREETINGS TO ALL WHO HAVE DONE A GREAT SERVICE TO TAMIL AND TAMILS...!!!
கருத்துரையிடுக