31/12/12 குங்குமம் தமிழ் வார இதழ் வெளியிட்டிருக்கும் 2012 க்கான 10 முக்கியமான நூல்களில் [டாப் டென்] -என் மொழிபெயர்ப்பான ’அசடனு’ம்’ இடம் பெற்றிருக்கிறது.
இலக்கியம்,அரசியல்,பொருளியல் எனப்பல தளங்களிலும் வெளிவந்த முக்கியமான சில நூல்களை எழுத்தாளர் திரு ஜெயமோகன் இப்பட்டியலில் தன் கணிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கும் பட்டியலிலும் அசடன் இடம் பெற்றிருக்கிறது.
மூலநூலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் மொழியை என் சொற்களில் வைத்தது மட்டுமே நான் செய்தது. இவ்வாண்டில் இம்மொழிபெயர்ப்பைப் பெருமளவில் வரவேற்று வாசித்த இலக்கிய ஆர்வலர்களுக்கும்,விமரிசகர்களுக்கும்- அளவில் மிகப்பெரியதான இந்த நூலைப் பல வகைச்சிக்கல்களுக்கு நடுவிலும் பிரம்மாண்டமாக வெளியிட்ட மதுரை பாரதி புத்தகநிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கும் என் நன்றி....
2012 இல் என் நூலுக்கும் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்ததை நிறைவுடன் ஏற்று....அடுத்த அடி எடுத்து வைக்க இன்னும் பொறுப்புடன் ஆயத்தமாகிறேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக