துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.9.10

’’போறாளே பொன்னுத்தாயி...’’

நெஞ்சின் அடியாழம் வரை ஊடுருவிக் கலந்து - இனம்புரியாத சுகமானதொரு கிளர்ச்சியை உண்டாக்கும் அற்புதத் தேன்குரலுக்குச் சொந்தக்காரரான சொர்ணலதாவின் மறைவு இசை விரும்பிகளுக்கு ஒரு பேரிழப்பு.


சொர்ணலதாவின் உச்சரிப்பில் பி.சுசீலாவின் உச்சரிப்பைப் போன்ற தெளிவும் ,துல்லியமும் இணைந்திருக்கும்;
பாடலின் ஒரு சொல்லைக்கூட நாம் நழுவ விட்டு விட முடியாதபடி..அதே வேளையில் ..மிக மிக உணர்ச்சிகரமாகக் கேட்பவர்களை வந்தடைவது அந்த அபூர்வக் குரல்.


போறாளே பொன்னுத்தாயியில்(கருத்தம்மா) இழைந்தோடும் பெண்ணின் புலம்பெயர் சோகமும்...

எவனோ ஒருவனின் வாசிப்பிலுள்ள(அலைபாயுதே)தொலைதூர உருக்கமும் கல்நெஞ்சையும் கசியச் செய்யும் உருக்கம் கொண்டவை.

காற்றோடு கலந்து வந்து செவியை இதமாக வருடிக் கொடுத்து விட்டுச் செல்லும்- எனது இரசனைக்கு மிகவும் உரித்தான -சொர்ணலதாவின் 
 இந்தப்பாடல்களுடன் அவருக்கு என் அஞ்சலிகள்.

4 கருத்துகள் :

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆம் அம்மா... அருமையான பாடகியை நாப்பதுக்குள் இழந்திருக்கிறோம் என்பது வருத்தம் அளிக்கும் விசயம். அவரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

மதுரை சரவணன் சொன்னது…

//நெஞ்சின் அடியாழம் வரை ஊடுருவிக் கலந்து - இனம்புரியாத சுகமானதொரு கிளர்ச்சியை உண்டாக்கும் அற்புதத் தேன்குரலுக்குச் சொந்தக்காரரான சொர்ணலதாவின் மறைவு இசை விரும்பிகளுக்கு ஒரு பேரிழப்பு.//

உண்மைத் தான். வருந்துகிறேன். ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

பாடலின் ஒரு சொல்லைக்கூட நாம் நழுவ விட்டு விட முடியாதபடி..அதே வேளையில் ..மிக மிக உணர்ச்சிகரமாகக் கேட்பவர்களை வந்தடைவது அந்த அபூர்வக் குரல்.///// அப்படியே வழிமொழிகிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.
அவர் என்னாளும் நம் மனதில்வாழ்வார்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி நண்பர்களே..
சின்னத் தம்பியின் ‘போவோமா ஊர்கோலம் ‘ பாடலும் கூட என்றென்றும் சொர்ணலதாவின் பெயர் சொல்லிக் கொண்டிருக்கக் கூடியதுதான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....