சக்ராதா மலைத் தொடர்களுக்குக்குள் மேற்கொண்ட
பயணத்தின்போது நான் எடுத்த சில புகைப்படங்கள்...,இணைய வாசகர்களின் பார்வைக்கு.
மலையும்,மலை சார்ந்த இடமும் என்று தமிழ்க் குறிஞ்சி சொல்லும் மலைத் தொடர்கள் திகட்டாத பல ஆனந்தக் காட்சிகளை உள்ளடக்கி வைத்திருப்பவை.
ஒவ்வொரு நிலப் பகுதியில் இருக்கும் மலைகளுக்கும் ஒவ்வொரு முகங்கள் உண்டு.
தேராதூனுக்கு மேல் மட்டத்தில் இமையம் தொடங்கும் இடத்தில்-சக்ராதா என்னுமிடத்தில் உள்ள இம் மலைத் தொடர்கள் ஈரம் பட்ட மண் செறிந்து இறுகிப் போனவை.எளிதில் இளகிக் கரையக் கூடியவை.
மலைத் தொடர்களை ’அடுக்கம்’ என்ற சொல்லால் குறிப்பிடும் சங்கப்புலவனின் நுண்ணிய அவதானிப்பு எத்தனை துல்லியமானது என்பதற்கு,ஒன்றுக்குள் ஒன்று உட்செறிந்தபடி..அடுக்கப்பட்டது போலக் காட்சி தரும் இம் மலை அமைப்பே சாட்சியம் கூறுகிறது.
மானுட முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்...இயற்கை வழங்கும் இன்பம்
இணையற்ற இன்பம்தானே?.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக