துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.11.10

இரு மாற்றங்கள்

இத் தளத்தை இலக்கியத்துக்கும்,சமூகத்துக்கும் மேலும் சற்று  அண்மையாகக் கொண்டு சென்று மேம்படுத்தும் நோக்கில் கீழ்க்காணும் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.


1.இலக்கிய உரையாடல் என்னும் புதுப் பகுதி தனியொரு பக்கமாக அமையவிருக்கிறது.வாசகர்களும் அதில் பங்கு பெற்று இலக்கியப்போக்குகள் குறித்த தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
காழ்ப்புணர்வுகள் தவிர்த்த- மெய்யான இலக்கிய வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஆரோக்கியமான விவாதங்களைத் தூண்டும் கருத்துக்கள் வலையில் பதிவாக வெளியிடப்பட்டுத் தொடர் விவாதங்கள் இந்த வலையின் பதிவரால் மட்டுமன்றிப் பிற வாசகர்களாலும் தொடர்ந்து மேலெடுத்துச்செல்லப்படும்.

மேலும் சங்க இலக்கியம் தொடங்கிச் சமகால இலக்கியம்-(நாவல்,சிறுகதை,கவிதை) வரை வாசகர்களுக்கு ஏற்படும் ஐயங்களையும், நூல்கள் மற்றும் படைப்பாளிகள் குறித்த விவரங்களையும் அறிய விரும்பினாலும் இப் பகுதியில் பதிவு செய்தால் நான் அறிந்துள்ளவரை எனக்குத் தெரிந்த தகவல்களை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.


மின் அஞ்சலின் subject பகுதியில் இலக்கிய உரையாடல் எனக்குறிப்பிட்டு உங்கள் ஐயம்,கேள்விகள் மற்றும் சிந்தனைகளை மின் அஞ்சல் செய்யலாம்.


2.அடுத்த மாற்றம் பின்னூட்டம் பற்றியது.
பெரும்பாலான பின்னூட்டங்கள் ஒற்றை வரிப் பாராட்டுக்களாகவும்,
சில வேளைகளில் ஆழ்ந்த வாசிப்பில்லாதவைகளாகவும் அமைந்து விடுவதால் 
அவற்றைத் தவிர்க்கும் நோக்கில் 
தனிப் பதிவுகளுக்கான பின்னூட்டங்களுக்கு மாறாகக் 
குறிப்பிட்ட பதிவுகள் குறித்த கடிதங்களை மட்டுமே இனி இத் தளத்தில் ஏற்க முடிவு செய்திருக்கிறேன்.
கடிதம் வழியாகவும் விவாதங்களை முன்னெடுத்துச்செல்ல முடியுமென்பதாலும்,
பதிவர்-வாசகர் ஆகிய இரு முனை வளர்ச்சிக்கும் இதுவே பயனளிக்க வல்லது என்பதாலும் 
இணைய நண்பர்கள் இதைத் தவறாகக் கொள்ளாமல் தொடர்ந்த தங்கள் அன்பு கலந்த ஒத்துழைப்பையும்,ஆதரவையும் 
எனக்கு அளிப்பார்கள் என்ற எண்ணத்தில் இம் மாற்றங்களைத் துணிந்து மேற்கொள்கிறேன்.
மின்னஞ்சலிடுவதற்கான முகவரி
susila27@gmail.com
கடிதம் அனுப்புவதற்கான மின் அஞ்சல் முகவரி வலையின் முகப்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடிதம் எழுதும் அன்பர்கள் அதிலேயே தங்கள் வலைத்தள இணைப்பையும் குறிப்பிட்டால் பலரும் பயன் பெற வழி ஏற்படும்.





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....