துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.1.12

’தேவந்தி’-ஒரு விமரிசனம்

 வல்லினம் கலை இலக்கிய இணைய இதழில் - ’கதவைத் தட்டும் கதைகள்’என்னும் தொடர்ப் பதிவு வரிசையில், க.ராஜம் ரஞ்சனி அவர்கள் என் ‘தேவந்தி’சிறுகதை குறித்து எழுதியுள்ள விமரிசனக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...




’’சித்தார்த்தர் இல்லாத யசோதரையின் வாழ்நாள்கள் எவ்வாறு கழிந்திருக்கும்? யசோதரையின் மனதில் எழுந்த உணர்வுகள் யாவை? என பதிலுக்காக காத்திருக்கும் கேள்விகள் பல....இவ்விடம் இன்னொரு பெண்ணையும் குறிப்பிட வேண்டும். அவள்தான் சிலப்பதிகார கண்ணகியின் தோழி ‘தேவந்தி’. திருமதி எம்.ஏ.சுசிலாவின் எழுத்தில் கதையாய் உருப்பெற்றிருக்கும் இவள் வாழ்க்கையும் மனதோடு மனதாய் சேர்ந்து கொள்கின்றது...பெண்களின் மனம் மற்றும் உடல் மென்மையானதென கவிதைகளிலும் பாடல்களிலும் மட்டும் கேட்பதற்கு இதமாக உள்ளது. ஆனாலும் பெண்களின் மனமும் உடலும் தான் ஆண்களைவிட வலிமையாக உள்ளதாக இக்காவிய நாயகிகள் உணர்த்துகின்றனர்....பெரும்பாலான ஆண்களின் லட்சிய கனவுகளைத் தொழில், பணம் என்பவையே அபகரித்துக் கொள்கின்றன. இவை யாவும் சுயத்தேவைகளின் அடிப்படையில் ஆண்களுக்குத் திருப்தியை வழங்கிவிட்டால் வெற்றி எனவும் கருதப்படுகின்றது. இவ்வாறான ஆண்களுக்கு மத்தியில் மனைவி எனும் ஸ்தானத்தில் இருக்கும் பெண் என்பவளின் மனமோ உணர்வோ மதிக்கப்படுவதில்லை....தேவந்தியின் நிலை அவளோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இருக்கும் நிலையாகலாம் என கண்ணகியிடம் குமுறுகின்றாள். அத்தருணங்களில் கண்டிப்பாக மௌனங்கள் உடைப்படும் என உறுதி தருகின்றாள். மௌனங்கள் உடைப்பட்டு அநியாயங்கள் வீழ்ந்து விடும் தருணங்களுக்காக காத்திருக்கின்றேன். நியாயங்கள் நிமிர்ந்து எழுவதற்கு...’’
கட்டுரையை முழுவதும் படிக்க இணைப்பு...
திருமதி எம். ஏ. சுசிலாவின் ‘தேவந்தி’-க.ராஜம் ரஞ்சனி



தேவந்தி சிறுகதையை வாசிக்க...இணைப்பு

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....