துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.12.12

கண்ணீர் விடை!

தில்லி பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த பெண் இன்று காலை மரணமடைந்த செய்தி வந்திருக்கிறது.

பொதுவாக இத்தகைய கொடுமைகளுக்கு -அதிலும் கூட்டான பாலியல் வல்லுறவுக்கு- ஆளாகும் பெண்கள் மரிக்கவே விரும்புவார்கள்; மாறாக இந்தச் சகோதரி வாழ விரும்பி மன திடத்தோடு போராடியிருக்கிறார். தான் உயிரோடு எழுந்து வந்து குற்றவாளிகளை இனம் காட்டி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்றே துடித்திருக்கிறார்; நினைவு வரும் நேரங்களிலெல்லாம் அதையே எழுதி எழுதிக் காட்டியுமிருக்கிறார். அவரது குடும்பமும் கூட இந்தக்கருத்தையே கொண்டிருந்தது வித்தியாசமானது...

அவரது மன உரம் அவரை மீட்டுவிடும் என்னும் நமது நம்பிக்கை பொய்த்துப்போக அவர் இன்று காலை மரணம் எய்தி விட்டார்.கோழையைப் போலக் கண்ணீர் சிந்தியபடி இறக்காமல் நெஞ்சுரத்துடன் வாழத் துடித்த அவருக்கு நேர்ந்திருப்பது நிச்சயமாக வீர மரணம்தான்...

இந்தவாரக் குமுதத்தில் நண்பர் ‘தீம்தரிகிடஞாநி’ அந்தச்சகோதரிக்கு எழுதியிருக்கும் மனம் திறந்த மடலில் குறிப்பிட்டிருப்பது போல அழுகிப்போன இந்தச் சமூகத்தில் அங்கம் வகிக்கும் நாம் ஒவ்வொருவருமே இந்தக் குற்றத்துக்குப் பொறுப்பானவர்கள்தான்...

‘’இந்த நாட்டில் பிறந்ததற்காக முதன்முதலாக வெட்கப்படுகிறேன்,அவமானம் கொள்கிறேன்..’’
இன்று விடியலில் என் தோழியின் மகளிடமிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தி இது..

இந்த நாட்டில் பிறந்ததற்கு நாண வேண்டாம் பெண்ணே! நல்லதொரு நாட்டை மிருகங்கள் உலவும் காடாக மாற்றி வைத்திருக்கும் அரசியல்,சமூக அமைப்புக்களுக்காக வெட்கப்படுவோம்...!
மரித்துப்போன அந்த ஆத்மாவிடம் அவர்கள் அனைவர் சார்பிலும் நாணித் தலை குனிந்தபடி பாவ மன்னிப்புக்கோருவோம்..!


3 கருத்துகள் :

ஒன்று சேர் சொன்னது…

//இந்த நாட்டில் பிறந்ததற்கு நாண வேண்டாம் பெண்ணே! நல்லதொரு நாட்டை மிருகங்கள் உலவும் காடாக மாற்றி வைத்திருக்கும் அரசியல்,சமூக அமைப்புக்களுக்காக வெட்கப்படுவோம்...!
மரித்துப்போன அந்த ஆத்மாவிடம் அவர்கள் அனைவர் சார்பிலும் நாணித் தலை குனிந்தபடி பாவ மன்னிப்புக்கோருவோம்..!//
கண்டிப்பாக அம்மா

எஸ் சம்பத் சொன்னது…

//இந்த நாட்டில் பிறந்ததற்கு நாண வேண்டாம் பெண்ணே! நல்லதொரு நாட்டை மிருகங்கள் உலவும் காடாக மாற்றி வைத்திருக்கும் அரசியல்,சமூக அமைப்புக்களுக்காக வெட்கப்படுவோம்...!
மரித்துப்போன அந்த ஆத்மாவிடம் அவர்கள் அனைவர் சார்பிலும் நாணித் தலை குனிந்தபடி பாவ மன்னிப்புக்கோருவோம்..!//
கண்டிப்பாக அம்மா,

எஸ்.சம்பத்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

Chinna Durai
9:41 AM (8 hours ago)

to me
ஆம் நிச்சயமாக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....