துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.12.10

தில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு 2


(இன்று 10.12.10 தொடங்கும் 
தில்லி தமிழ்ச்சங்க - தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு நிகழ்வில் -முந்தைய அழைப்பிதழிலிருந்து ஒரு சிறிய மாற்றம்
.
11 -12-10 சனிக்கிழமையன்று காலையில் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றவிருந்த மைய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்கள் முதல் நாள் (இன்று)10 ஆம் தேதி மாலை(6:30மணி) நடக்கவிருக்கும் தொடக்க விழாவிலேயே கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்.
பிற நிகழ்வுகளும்,கருத்தரங்கஅமர்வுகளும் முன்னுள்ள திட்டத்தின்படியேநிகழும்)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தில்லி தமிழ்ச்சங்கத்தில் 
தமிழ் 2010...
இன்று மாலைதுவக்கவிழா
மாலை 5 மணியளவில் மங்கல இசையுடன் தொடங்கும் விழாவில்
 தில்லி முதல்வர் ஷீலாதீக்‌ஷித்,
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ,
தமிழக அரசின் சிறப்புப்பிரதிநிதி கம்பம் செவேந்திரன் 
ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.
புதுதில்லி ஜவகர்லால்நேரு பல்கலைப் பேராசிரியர் நாச்சிமுத்து ,
தில்லி பல்கலைப் பேராசிரியர் அ.மாரியப்பன்
கவிஞர் சேரன் முதலியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
அதைத் தொடர்ந்து பத்மஸ்ரீ சரோஜாவைத்தியநாதனின் 
பரதநாட்டியம் நடைபெறவுள்ளது.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
11.12.10 சனிக்கிழமை காலையில் நிகழும் 
50 ஆண்டுக்காலப் புனைவிலக்கியம்
என்னும் அமர்வில்
பின்நவீனத்துவச்சிந்தனையாளர் திருபிரேம்,
எழுத்தாளர்கள் திரு நாஞ்சில் நாடன்,
திருஎஸ்.ராமகிருஷ்ணன்
ஆகியோர் பங்கேற்கின்றனர்.
குறிப்பிட்ட அந்த அமர்வை நெறிப்படுத்தி நடத்தும் பொறுப்பு (நெறியாளுகை) எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
எழுத்தாளர்களும்,விமரிசகர்களும்,நாடக மற்றும் ஊடகவியலாளர்களும்
(நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் , கவிஞர் சிற்பி , கவிஞர் முத்துலிங்கம் ,
கவிஞர் கலாப்ரியா , பேராசிரியர் ப்ரேம், வெளி ரங்கராஜன் ,இமையம்,அம்பை, 
லிங்க்ஸ்மைல் வித்யா , காந்தளகம் சச்சிதானந்தன் ,அமரந்தா ,தியடோர் பாஸ்கரன் , 
ரவி சுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி , 
பேராசிரியர் சிவப்பிரகாஷ்,சந்திரபோஸ்முதலியோர்)
பங்கு பெற்றுச் சொற்பொழிவாற்றும் நான்கு அமர்வுகள்,
50ஆண்டுக்காலப் புனைவிலக்கியம்,
கவிதை இலக்கியம்,
கணினித் தமிழ்,
பிறமொழிகளில் தமிழ்,
ஒடுக்கப்பட்டோர் இலக்கியம்,
புலம் பெயர்ந்தோர் இலக்கியம்,
நாடக-ஊடகத்தமிழ்
எனப் பல அமர்வுகளாக நடைபெறவிருக்கின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் 
இவ் விழாவின் நிறைவு விழாவில் பங்குகொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்.
தலைநகர் தில்லியின் தமிழ் ஆர்வலர்களுக்கு நல் விருந்தாக அமையவிருக்கும் இந்நிகழ்வுகளுக்கு
அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்குமாறு
தில்லி தமிழ்ச்சங்கம் அன்புடன் அழைக்கிறது.
இவ்விலக்கிய அமர்வுகளில் பங்கேற்கும் ஆர்வலர்கள் ,ஒவ்வொரு சொற்பொழிவாளரின் உரை மீதும் கருத்துச் சொல்லவும்,வினாத் தொடுக்கவும்,ஐயங்களைத் தெளிவுபடுத்தவும் நேரம் ஒதுக்கப்படுவதால் அந்த நல் வாய்ப்பைப் பயன்படுத்தி,இக் கருத்தரங்கை மேலும் சுவையும்,பயனும்கூடியதாகவும் ஆக்க வேண்டும் என்பதே  அமைப்பாளர்களின் எதிர்பார்ப்பு.




கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....