துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.12.10

இரு மாற்றங்கள்;கடிதங்கள்

என் வலைத் தளத்தில் செய்துள்ள இரு மாற்றங்கள் குறித்த எதிர்வினைக் கடிதங்களும் அவற்றுக்கான என் விளக்கமும்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
நல்ல முயற்சி. விவாதங்கள் மூலம் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ முடியும். எழுத்தாளர் ஜெயமோகன் இதைச் செவ்வனே செய்துவருகிறார். வாசகர்களின் இலக்கிய சந்தேகங்கள் தீர்த்து வைப்பதன் மூலம் பலருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆரம்பகட்டமாக பரஸ்பர பகிர்தல் நடைபெறும். உங்கள் இலக்கியப் பணிக்கு வாழ்த்துக்கள்.
-தமிழ்மகன்.

நல்ல முயற்சி. 
வலைப்பதிவுகளைப் பொழுது போக்குக்காகப் படிப்பவர்கள், இலக்கிய ஆர்வமோ / சந்தேகங்களோ கொண்டவர்களாக இருப்பார்களா என்கிற சிறிய சந்தேகம் எங்கள் மனதில் இருக்கின்றது.
அப்படி இல்லாமல், எல்லோரும் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் பல நன்மைகள் விளைய சந்தர்ப்பம் உள்ளது. எங்கள் பதிவுகளில் நீங்கள் காணும் பிழைகள் எது இருந்தாலும், அவற்றை நீங்கள், தயங்காது எங்கள் மின்னஞ்சலுக்கு பிழைகளையும், திருத்தங்களையும் எடுத்துரைக்கலாம், நாங்கள் அதை நிச்சயம் மதித்து, பின்பற்றுவோம். 
அன்புடன்,
க கோ கௌதமன்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
எம்.ஏ.சுசீலா
முயற்சிக்கு வாழ்த்துக் கூறிய திரு தமிழ்மகன்,மற்றும் நண்பர் கௌதமன் ஆகியோருக்கு நன்றி.
வலைப் பதிவை வெறும் பொழுதுபோக்காக ஆக்கி விடாமல் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரு சோதனை முயற்சிதான் இது. கௌதமன் தெரிவித்த ஐயங்கள் எனக்கும் உண்டு;எனினும் இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு சில வாசகர்களாவது இந்த முயற்சிக்குக்கை கொடுப்பார்கள் என்றநம்பிக்கையும் ஒரு புறம் இருந்து கொண்டுதானிருக்கிறது.காலம் என்ன சொல்கிறது..பார்ப்போம்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

மாற்றங்களைக் கண்ணுற்றேன் அம்மா. இந்த மாற்றங்களின் தாக்கம் வாசகர்களிடம் ஏற்பட நீண்ட நாட்களாகும். ஜெயமோகன் தளத்தில் வாசகர்கள் பின்னூட்டம், அதன் மீது அவர் பதில் என்பது ஒருவிதமாகவும், வேறு சில எழுத்தாளர்களுடைய தளத்தில் வேறுவிதமாகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்..

முதல் மாற்றமாக நீங்கள் அறிவித்திருக்கிற இலக்கிய உரையாடல் என்பது பதிவுகளில் தொடர்ந்து நடக்கக் கூடியது அல்ல. அது குழுமங்கள்,  புல்லட்டின் போர்ட் மாதிரி தனி இழைகளாகக் கொண்டு போகக் கூடிய வசதி இருந்தால் தான் சாத்தியம், எடுத்துக் காட்டாக திரு பென்னேஸ்வரன் கூட சமீபத்தில் தமிழ்வாசல் என்று கூகிள் குழுமம் ஒன்றைத் துவங்கி இருப்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்து, பின்னூட்டங்கள் குறித்த மாற்றம்! இது கூட மட்டுறுத்தல் வசதியை நீங்கள் எப்படிப் பயன் படுத்துகிறீர்கள்  என்பதைப் பொறுத்ததே. ஒற்றை வரியோ, அல்லது ரிப்பீட்டே  என்பது மாதிரி வருகிற பின்னூட்டங்கள், நமக்கு எப்படிப் பட்ட வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு அளவுகோல், அவ்வளவுதான்! இதைக் கூட அதிகமாகப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து. நம்முடைய எழுத்தில், என்ன எழுதுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் மட்டுமே போதுமானது. நீங்கள் ஒரு புத்தக ஆசிரியராகவும் இருப்பதால், உங்களுடைய படைப்புக்களை மார்கெடிங் செய்ய தளத்தில் இந்த மாற்றங்கள் மட்டுமே போதாது. டாட் காம் என்று தனியாக தளம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், தளத்தில் வேறு சில வசதிகளையும் செய்ய வேண்டி இருக்கும். Wordpress  தள தீம்கள், நிறைய வசதிகளுடன் கிடைக்கின்றன. வண்ணம் முதல், உள்ளடக்கம், உங்களைப் பற்றிய வேறு விவரங்கள், எழுதிய புத்தகங்களின் குறிப்பிட்டபகுதிகளை தளத்திலேயே படிக்கும் வசதி இப்படி நிறைய மாற்றங்களைப் படிப்படியாக அதில் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இது என்னுடைய இரண்டு பைசே.
அன்புடன்
கிருஷ்ண மூர்த்தி

எம்.ஏ.சுசீலா
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி.இது இப்போதைக்குஒரு சோதனை மட்டுமே.
தமிழ் இலக்கியத்தில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் 36 ஆண்டுக்காலம் ஆசிரியராகப் பணியாற்றியதாலும்,படைப்பிலக்கியத் துறையில் கொண்ட நாட்டத்தினாலும் எனக்குத் தெரிந்திருக்கும் - மற்றும் என் சேமிப்பிலிருக்கும் ஓரளவு தகவல்களைத் தேவைப்படும் நபர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வமே இந்த அடியை நான் எடுத்துவைக்கக் காரணம்..
வாசகர்களிடம் இதன் தாக்கம் ஏற்பட நாளாகும் என்பதையும்,அவ்வப்போது படித்து விட்டுப் போகும் பதிவுகளில் தொடர்ந்த செயல்பாடு சற்றுக்கடினமானதாகத்தான் இருக்கும் என்பது எனக்கும் தெரிகிறது.
இருந்தாலும் அத்தகைய ஆர்வமுள்ள வாசக வரவுக்காகக் காத்திருப்பதில்பிழையில்லையே.
அத்தகையோர் வரும் வரை பிற பக்கங்களை என் போக்கில் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.
தங்கள் உடன் பதிலுக்கு நன்றி.

பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட......

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....