.
இலக்கிய அமர்வுகளில் பார்வையாளர்களின் கூட்டமும்,அவர்களது பங்கேற்பும் சற்றுக் குறைவானதுதான் என்றபோதும் ஆர்வமுள்ள சிலர் ஊக்கமுடன் கலந்து கொண்டதும் - பார்வையாளர்களின் எண்ணிக்கைக் குறைவைப் பொருட்படுத்தாமல் கட்டுரை வாசிக்கும் அறிஞர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் கருத்துக்களை வழங்கியதும் - இன்றைய இலக்கியம் போகும் திசையை அணுகவும்,அறியவும் ஒரு சிலராவது நாட்டம் கொண்டிருக்கிறார்களே என்ற நம்பிக்கையையும் தெம்பையும் அளிப்பதாக இருந்தது.
நான் நெடுநாள் அறிமுகம் கொண்டிருக்கும் எனது பெண்ணிய ஆதரிசமாகிய அம்பை ,
அம்பையுடன் நான்.. |
வாழ்வில் அழியாச் சுவடுகளைப் பதித்தபடி என்றும் சிரஞ்சீவித்துவம்பெற்றிருக்கும் தருணங்கள்.
ஈழக்கவிஞர் சேரன் தொடக்க விழாவில் சிறிது நேரமே கலந்து கொண்டபோதும் அவரது கவிதை ,அனைவரின் உணர்வுகளையும் கண நேரம் கலங்கடித்து விட்டது.(காண்க யூ டூப்)
தமிழைக் கணினி வழி கொண்டுபோய்ச் சேர்க்கத் தனது நிறுவனத்தாருடன் என்.எச்.எம் எழுதியை வடிவமைத்துத் தந்திருக்கும் கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியின் சுறுசுறுப்பு அலாதியானதாக இருந்ததென்றால், புலம் பெயர்ந்த ஈழத் தமிழரும் காந்தளகம் பதிப்பக் உரிமையாளருமான திரு மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் , கருத்தரங்க நிகழ்வு நடப்புக்களைக் காட்சிப்பதிவுகளாக்கி உடனுக்குடன் யூ டியூபில் பதிவேற்றி உலகத் தமிழர் அந் நடப்புக்களைத் தாமதமின்றிக் காண வழியமைத்துத் தந்தார்.
அவருக்கு நன்றி கூறியபடி சில நேரலை காட்சிப்பதிவுகளும்,
நானும் வேறு நண்பர்களும் எடுத்த புகைப்படங்களும் இங்கே...
(கருத்தரங்க அமர்வுகளில் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சில செய்திகள்.. அடுத்து வரும் பதிவில்...)
பாரதி பாடல்கள் சேர்ந்திசை தில்லி தமிழ்ப்பள்ளி மாணவிகளும்,தமிழ்ச்சங்கத்தில் இசை பயில்வோரும்... |
முதல்நாள் தொடக்கவிழாவில் தில்லி முதல்வர் ஷீலாதீக்ஷித் மற்றும் பேராசிரியர் நாச்சிமுத்து,கவிஞர் சேரன் |
50 ஆண்டுக்காலப் புனைவிலக்கியம் பற்றிய அமர்வில் நாஞ்சில்நாடன்,பிரேம் ஆகியோரின் கட்டுரைகளை நெறியாளுகை செய்யும் நான் |
நாடக ஊடகத் தமிழ் குறித்த அமர்வில்நெறியாளுகைப் பொறுப்பேற்றிருந்த வடக்குவாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன், அரங்கில் தியோடார் பாஸ்கரன்,வெளிரங்கராஜன்,ரவிசுப்பிரமணியன்.. |
விழாநிறைவில் அப்துல் கலாம் நினைவுப்பரிசு அளிக்கிறார்.. |
யூ டூப் வழி நேரடிக்காட்சிகள்சில..
3 கருத்துகள் :
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"-என்னும் பாரதியின் அவாவினை நிறைவேற்றுவதில் தில்லித் தமிழ்ச்சங்கம் முனைப்புடன் இருப்பது பாராட்டத் தக்கது. அம்மையாரின் இலக்கியப் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்!
-அரிமா இளங்கண்ணன்
இந்தக் கருத்தரங்கம் உண்மையில் எனக்கோர் புது அனுபவம். நன்றி அம்மா.
உங்கள் அலசலைப் படிக்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டீர்கள்.
கருத்துரையிடுக