அசடன் மொழியாக்க நாவல் குறித்து என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.அவருக்கு என் நன்றி.
அசடன்
//அசடன் நாவல் தமிழில் எம்.ஏ.சுசீலாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு. அவர்கள் வெளியிட்ட முந்தைய ருஷ்ய செவ்விலக்கிய நூல்களைப்போலவே அகலமான வடிவமைப்பில் கதைமாந்தர்களின் முகங்களைக் காட்டும் திரைப்படக் காட்சிப்படங்களுடன் இந்நூல் வெளியாகியிருக்கிறது.
சிறந்த கட்டமைப்பு கொண்ட நூல்.நான் இந்நூலுக்கு அசடனும் ஞானியும் என்ற சிறிய முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.
எம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கத்தைக் குறிப்பாகச் சொல்லவேண்டும்.
முழுமையாக மூலத்துக்கு விசுவாசமாக இருந்தபடி அற்புதமான சரளத்தைக் கொண்டுவர அவரால் முடிந்திருக்கிறது. உணர்ச்சிகரமான நீண்ட உரையாடல்களே இந்நாவலின் அழகியலைத் தீர்மானிக்கின்றன. அவற்றைத் தமிழ் மொழி சார்ந்த அனுபவமாக ஆக்க சுசீலாவால் முடிந்திருக்கிறது. ஏற்கனவே தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
தமிழில் ஒரு பேரிலக்கிய அனுபவத்தை நாடுபவர்கள் தவறவிடக்கூடாத நூல் இது//
மேலும் படிக்க....
1 கருத்து :
அசடன் நூலை வாங்கி வாசிக்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது. நான் ரஷ்ய நாவல்களில் சிங்கிஸ் ஜத்மாதவ் அவர்கள் எழுதிய ஃபேர்வெல் குல்சாரி, ஜமீலா மட்டும் தான் வாசித்து இருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.
கருத்துரையிடுக