என் எழுத்தின் ஆதர்சம்...,என் தமிழின் ஆதர்சம்..,என் ஆளுமையின் ஆதர்சம் மகாகவி பாரதி. பாரதி பிறந்த இந்தத் திருநாளில் அவன் சார்ந்த ஒரு நூல்,ஒரு ஓவியம்,ஒரு பாடல்...ஒரு காணொளி...இங்கே பகிர்வுக்கு..
பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10.12.12
19.9.12
’’மேன்மைத் தொழிலில்..’’
விநாயகர் நான்மணிமாலையில் பாரதி வேண்டுவதே இன்று
நம் வேண்டுதலும்....
‘’பக்தி உடையார் காரியத்தில்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல்
மெல்லச் செய்து பயன் அடைவர்
சக்தி தொழிலே அனைத்தும் எனில்
சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்...
வித்தைக்கு இறைவா கணநாதா
மேன்மைத் தொழிலில் பணி எனையே’’
‘’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்’’
காண்க,இணைப்பு;
நம் வேண்டுதலும்....
‘’பக்தி உடையார் காரியத்தில்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல்
மெல்லச் செய்து பயன் அடைவர்
சக்தி தொழிலே அனைத்தும் எனில்
சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்...
வித்தைக்கு இறைவா கணநாதா
மேன்மைத் தொழிலில் பணி எனையே’’
‘’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்’’
காண்க,இணைப்பு;
பாரதியின் விநாயகர் நான்மணிமாலை...
10.9.12
தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-3
பாரதியின் ‘அர்ஜுன சந்தேகம்’
11/9/12 பாரதியின் நினைவு நாள் என்பதால் அதை ஒட்டி அவனது கதை ஒன்று...
11/9/12 பாரதியின் நினைவு நாள் என்பதால் அதை ஒட்டி அவனது கதை ஒன்று...
31.12.11
’’காக்கை குருவி..’’
’’காற்றடித்ததிலே மரங்கள் கணக்கிடத் தகுமோ நாற்றினைப் போலே சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே..’’ -பாரதியின் ’பிழைத்த தென்னந்தோப்பு’பாடலிலிருந்து.... |
| ’’நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே-இந்த நேரமிருருந்தால் என் படுவோம்..’’ - பாரதியின் ’புயற்காற்று' |
பாரதி வாழ்ந்த காலத்தில் ஒரு முறை கடும்புயல் புதுவையைத் தாக்கத் தாங்க முடியாத உயிர்ச்சேதங்கள்.பொருட்சேதங்கள்....
11.12.11
1.9.11
பாரதியின் விநாயகர்
![]() |
| பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்-குடைவரைச் சிற்பம் |
உலகின் தலையாய எழுத்தர்களில் ஒருவர் விநாயகர்.
வியாசபாரதத்தை வியாசர் சொல்லிக் கொண்டே போகத் தன் கொம்பின் முனை முறித்து அதை விநாயகர் எழுதியதான ஒரு தொன்மம் நம்மிடை வழங்கி வருகிறது.
விநாயகக் கடவுள் என்னும் உருவகத்துக்குள்
‘’விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா!யெஹோவா!எனத் தொழுதன்புறும் தேவருந்தானாய்
திருமகள் பாரதி உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்’’என அனைத்து சமயங்களின் அனைத்துக் கடவுளரையும் தரிசிக்கும் திறம் பெற்று விளங்கியவன் ஆன்மிக ஞானியாகிய பாரதி.
புதுவை மணக்குள விநாயகரை வழிபடும் வழக்கம் கொண்டிருந்த பாரதிக்கு விநாயக உருவம்...
வாய் திறவா மோன நிலைக்குள் செல்ல வைக்கும் ஓங்காரத்தின் உருவகம்;
அது அகக் கண்ணை விழிக்க வைத்து உள்ளொளியை , ஆக்க சக்தியை மேம்படுத்துவது; புறக் கவலைகளிலிருந்து விடுவித்து அச்சமற்ற நிலைக்குக் கொண்டு செல்வது;
சலனமில்லா மனநிலையை வசப்படுத்தித் தருவது.
‘’கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்
குணமதில் பலவாம்......
உட்செவி திறக்கும்
அகக்கண் ஒளி தரும்
அக்கினி தோன்றும்
ஆண்மை வலியுறும்
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
துச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்
அச்சம் தீரும்
அமுதம் விளையும்
வித்தை வளரும்
வேள்வி ஓங்கும்
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்’’
என்கிறது பாரதியின் பாடல்..
‘’பக்தி உடையார் காரியத்தில்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல்
மெல்லச் செய்து பயன் அடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனில்
சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்
வித்தைக்கு இறைவா கணநாதா
மேன்மைத் தொழிலில் பணி எனையே’’
என்னும் பாரதியின் பொருள் பொதிந்த வேண்டுதலே நமது வேண்டுதலுமாகிறது...
‘’ஆழ்க உள்ளம் சலனமிலாது
அகண்டவெளிக்கண் அன்பினையே
சூழ்க ! துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெலாம்!
கிருத யுகம்தான் மேவுகவே’’
இணைப்பு;
பாரதியின் விநாயகர் நான்மணிமாலை
புதுவை மணக்குள விநாயகரை வழிபடும் வழக்கம் கொண்டிருந்த பாரதிக்கு விநாயக உருவம்...
வாய் திறவா மோன நிலைக்குள் செல்ல வைக்கும் ஓங்காரத்தின் உருவகம்;
அது அகக் கண்ணை விழிக்க வைத்து உள்ளொளியை , ஆக்க சக்தியை மேம்படுத்துவது; புறக் கவலைகளிலிருந்து விடுவித்து அச்சமற்ற நிலைக்குக் கொண்டு செல்வது;
சலனமில்லா மனநிலையை வசப்படுத்தித் தருவது.
‘’கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்
குணமதில் பலவாம்......
உட்செவி திறக்கும்
அகக்கண் ஒளி தரும்
அக்கினி தோன்றும்
ஆண்மை வலியுறும்
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
துச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்
அச்சம் தீரும்
அமுதம் விளையும்
வித்தை வளரும்
வேள்வி ஓங்கும்
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்’’
என்கிறது பாரதியின் பாடல்..
‘’பக்தி உடையார் காரியத்தில்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல்
மெல்லச் செய்து பயன் அடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனில்
சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்
வித்தைக்கு இறைவா கணநாதா
மேன்மைத் தொழிலில் பணி எனையே’’
என்னும் பாரதியின் பொருள் பொதிந்த வேண்டுதலே நமது வேண்டுதலுமாகிறது...
‘’ஆழ்க உள்ளம் சலனமிலாது
அகண்டவெளிக்கண் அன்பினையே
சூழ்க ! துயர்கள் தொலைந்திடுக!
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெலாம்!
கிருத யுகம்தான் மேவுகவே’’
இணைப்பு;
பாரதியின் விநாயகர் நான்மணிமாலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)

