துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.11.10

தலைநகர்தில்லியில்..தமிழ்2010-கருத்தரங்கம்

சம காலத் தமிழின் பலமுனை வளர்ச்சிப் போக்குகளைக் கருத்தில்கொண்டு,
தமிழ் 2010 
என்னும் 
இலக்கியக் கருத்தரங்கை
டிச.10,11,12 ஆகிய நாட்களில்மிகச்சிறப்பாக நிகழ்த்த
தில்லித் தமிழ்ச்சங்கம் திட்டமிட்டுள்ளது.

எழுத்தாளர்களும்,விமரிசகர்களும்,நாடக மற்றும் ஊடகவியலாளர்களும்
(நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் , கவிஞர் சிற்பி , கவிஞர் முத்துலிங்கம் ,
கவிஞர் கலாப்ரியா , பேராசிரியர் ப்ரேம், வெளி ரங்கராஜன் ,இமையம்,அம்பை, 
லிங்க்ஸ்மைல் வித்யா , காந்தளகம் சச்சிதானந்தன் ,அமரந்தா ,தியடோர் பாஸ்கரன் , 
ரவி சுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி , 
பேராசிரியர் சிவப்பிரகாஷ்,சந்திரபோஸ்முதலியோர்)
பங்கு பெற்றுச் சொற்பொழிவாற்றும் நான்கு அமர்வுகள்,
50ஆண்டுக்காலப் புனைவிலக்கியம்,
கவிதை இலக்கியம்,
கணினித் தமிழ்,
பிறமொழிகளில் தமிழ்,
ஒடுக்கப்பட்டோர் இலக்கியம்,
புலம் பெயர்ந்தோர் இலக்கியம்,
நாடக-ஊடகத்தமிழ்
எனப் பல அமர்வுகளாக நடைபெறவிருக்கின்றன.

புது தில்லிமுதல்வர் ஷீலாதீக்‌ஷித்,உள்துறைஅமைச்சர் திரு ப.சிதம்பரம்,முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் ஆகியோரும் இவ் விழாவில்பங்கேற்றுச்சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
தலைநகர் தில்லியின் தமிழ் ஆர்வலர்களுக்கு நல் விருந்தாக அமையவிருக்கும் இந்நிகழ்வுகளுக்கு
வருகை புரிந்து சிறப்பிக்குமாறு தில்லித் தமிழ்ச்சங்கம்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது....

3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விஷயம். தில்லி வாழ் தமிழர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழோசையில் திளைக்க நல்லதோர் வாய்ப்பு. தகவலுக்கு நன்றிம்மா.

விக்னேஷ்வரி சொன்னது…

மிக சிறப்பான நிகழ்ச்சி. அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நிச்சயம் முயல்கிறேன் அம்மா. தகவலுக்கு மிக்க நன்றி.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்புள்ள சுசீலா அம்மா அவர்களுக்கு
தமிழ்2010 இலக்கியக் கருத்தரங்கை டிச.10,11,12 ஆகிய நாட்களில் தில்லித் தமிழ்ச்சங்கம் நடத்தவிருக்கும் செய்தி மகிழ்வளிக்கிறது. நிகழ்ச்சி/நிரலைக் காணும்போது ஏக்கம் மேலிடுகிறது. உங்கள் வலைத்தளத்தில் மொத்த
நிகழ்வுகளையோ, முக்கிய நிகழ்வுகளை மாத்திரமோ பதிவு செய்ய இயலுமா
ரவிச்சந்திரன்
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
உங்கள் ஆர்வத்துக்கு என் நன்றி.
கட்டாயம் என் வலையில் பதிவுசெய்கிறேன்.
தமிழ்ச்சங்கத்துக்கென்றே ஒரு தனித் தளம் உண்டு.அதிலும் சில பதிவுகள் வரக்கூடும்.
அன்புடன்,
சுசீலா
’’’’’
எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....