துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.11.10

குற்றமே தண்டனையாக...-தமிழ்மகனின் பதிவு

குற்றமும் தண்டனையும் நாவல் குறித்தும்,எனது மொழிபெயர்ப்பு பற்றியும்'' குற்றமே தண்டனையாக''என்னும் தலைப்பில் தினமணி முதுநிலை உதவி ஆசிரியரும்,சிறந்த நாவல்,மற்றும் அறிவியல் புனைகதைகளை அளித்து வருபவருமான எழுத்தாளர் திரு தமிழ்மகனின் பதிவு,



தமிழ்ஸ்டூடியோ இணைய இதழில் வெளியாகியுள்ளது.
http://koodu.thamizhstudio.com/nool_thiranaaivu_18.php




தமிழ் மகனின் தளத்திலும் அக் கட்டுரை வெளியாகியிருக்கிறது.
http://www.tamilmagan.in/2010/11/blog-post_07.html
தமிழ்மகனுக்கு என் நன்றி..
கட்டுரையை இணைப்புக்குள் சென்று முழுமையாக வாசிக்கலாம்..


அதன் ஒரு சில பகுதிகள் மட்டும் இங்கே பகிர்தலுக்கு..
//ருஷ்ய மொழியில் எழுதப்பட்ட அவர் (தஸ்தயெவ்ஸ்கி)எழுதிய நாவல் தமிழில் "குற்றமும் தண்டனையும்' என்ற பெயரில் மிகுந்த தாகத்தோடு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த பெரும் சாதனைகளுக்குப் பின்னால் துரைப்பாண்டியன் என்ற பதிப்பாளரும் எம்.ஏ. சுசீலா என்ற பேராசிரியரும் மட்டுமே இருக்கிறார்கள். நூறாண்டு பழமை கொண்ட இந்த நாவல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. சுமார் 560 பக்கங்களில் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.


பியோதர் தஸ்தயேவ்ஸ்கியை நாம் ஏன் பாராட்டுகிறோம்? அவருடைய உயிர்ப்புள்ள நடைக்காக. சிக்கலான அக சிந்தனை ஓட்டத்தை எழுத்துகளாக வடிப்பது சவால்மிக்க வேலை. எழுத்தை ஆளுகிறவர்கள் மட்டுமே அதில் வெற்றி பெறுகிறார்கள். மொழி பெயர்ப்பிலும் அது சாத்தியமாகும்போதுதான் முதல்நூலின் ஆசிரியனும் மொழி பெயர்ப்பாளனும் வெற்றியை பகிர்ந்து கொள்ள முடியும். எம்.ஏ.சுசீலாவுக்கு மொழிபெயர்ப்பு நூலின் வெற்றியில் நிச்சயம் பெரும் பங்கு உண்டு
...சிக்கல்கள் கொண்ட 560 பக்க நாவலைத்தான் எம்.ஏ. சுசீலா நமக்குத் தமிழில் தந்திருக்கிறார்.
நாவலில் மிகவும் கடினமான விவாதங்கள் உள்ள இடத்தில் எல்லாம் சுசீலாவின் திறமை சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்



சுசீலாவின் மொழி பெயர்ப்புக்கு ஏதாவது திருத்தம் சொல்ல வேண்டுமானால் இந்த ஒன்றைச் சொல்லலாம். "ஜுரவேகத்தில்' என்ற வார்த்தையை அவர் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவை "ஜுரத்தில்' என்ற அர்த்தப் பிரயோகத்திலேயே வருகின்றன. பொதுவாக ஜுரவேகம் என்பது வேகத்தைக் குறிப்பதற்கான வார்த்தைதான். அவனால் ஜுரவேகத்தினால் கண்ணைக்கூட திறக்க முடியவில்லை என்றோ, ஜுரவேகத்தில் தடுமாறினான் என்றோ வருகின்றன.


ருஷ்ய இலக்கியம் பெரும்பாலும் மொழி பெயர்ப்புகள் மூலமாகவே இந்தியாவை அடைந்தது; தமிழரும் அவற்றை மொழி பெயர்ப்பின் வாயிலாகத்தான் படித்தனர். ரா.கிருஷ்ணையா, நா.தர்மராசன், பூ. சோமசுந்தரம், ரகுநாதன், அ.கிருஷ்ணமூர்த்தி போன்ற பல சிறந்த மொழி பெயர்ப்பாளர்களால் ருஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள். அந்த வரிசையில் எம்.ஏ. சுசீலாவுக்கு ஓர் இடம் நிச்சயம் உண்டு. அடுத்ததாக அவர் அவர் தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவலை மொழி பெயர்த்து வருகிறார். அசடன் என்ற பெயரில் வெளிவர இருக்கும் அந்த நாவலை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். சுமார் ஆயிரத்துச் சொச்சம் பக்கம் வரும் என்று அவர் சொன்னார். மொழி பெயர்க்கும் அந்தக் கரங்களுக்கு என் கோடி நன்றிகளை இப்போதே தெரிவிக்கிறேன்.//


தொடர்புடைய பிற இணைப்புக்கள்;
குற்றமும் தண்டனையும்-மொழியாக்க அனுபவம்.
குற்றமும் தண்டனையும்;மேலும் கடிதங்கள்...
குற்றமும் தண்டனையும் ; கடிதங்கள்..

குற்றமும் தண்டனையும் கடிதமும் பதிவும்...
’அசடன்’-ஒரு முன்னோட்டம்.
குற்றமும்,தண்டனையும்-இரு எதிர்வினைகள்





3 கருத்துகள் :

இளங்கோ சொன்னது…

அசடனுக்கு காத்துக் கொண்டிருக்கிறோம். :)

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அசடன்,அச்சில் உள்ளது இளங்கோ.குற்றமும்தண்டனையும் விட மிகப் பெரியது இடியட் நாவல்.4 பாகங்கள் கொண்டது.1000 பக்கங்களுக்கு மேல் வருமென எதிர்பார்க்கிறோம்.என் பணி முடிந்து விட்டது.அச்சுப்படி, திருத்தங்கள் செம்மையாக்க சற்றுக் காலதாமதமாகும்.புத்தாண்டில் வரக்கூடுமென நம்புகிறேன்.

suneel krishnan சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா .தமிழ் மகன் அவர்களின் விமர்சனத்தையும் வாசித்தேன் .இது வரை நான் ஒரு ரஷ்ய எழுத்தாளரை கூட படித்ததில்லை ,இனி தொடங்க வேண்டும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....