துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.1.11

அசடன் வெளியீடு:இணைப்புக்கள்

இளவர்சன் மிஷ்கின்/இடியட்-அசடன்
மார்ச் 2011 இல் வெளிவர இருக்கும் எனது மொழியாக்க நூலாகிய ‘அசடன்’நாவலை (http://www.masusila.com/2010/12/blog-post_11.html)
(மூலம்;தஸ்தாயெவ்ஸ்கி-ஆங்கில வழி மொழியாக்கம்)
வாழ்த்தி வரவேற்று அதன் முன் வெளியீட்டுத் திட்டம் குறித்த செய்தியை
எழுத்தாளர்கள் திருஜெயமோகன் ,திரு எஸ்.ராமகிருஷ்ணன்ஆகிய இருவரும்
தங்கள் வலைத் தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.
என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அவர்கள் இருவருக்கும் என் நன்றி.

இணைப்புகள்;
http://www.jeyamohan.in/?p=10740
http://www.sramakrishnan.com/?p=2066

5 கருத்துகள் :

Unknown சொன்னது…

நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்

NARAYAN சொன்னது…

அன்புள்ள அம்மா,
எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகனின் பதிவுகளில் தங்களின் அசடனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் , அசடன் மேல் பல மடங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக
அய்யா ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழில் இது மிகவும் முக்கிய நிகழ்வு என்றும் இதனை வரவேற்று கொண்டாடவேண்டும் என்றும் பதிவு செய்திருக்கிறார்.
தங்களின் இத்தகைய கடின முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

இதற்கிடையில் தங்களின் தலைப்பில் சிறிது சந்தேகம்.
இடியட்டின் தமிழாக்கத்தை வலைப்பின்னலில் தேடியதில் முட்டாள் , அறிவிலி , மூடன் , மட்டி,மடையன்,பேதை போன்ற வார்த்தைகள் கிடைத்தன. ஆனால் தாங்கள் அசடன் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பதன் காரணம் என்ன?
மேலும் தமிழில் அசடு என்ற சொல்லாடல் சரளமாக பயன்படுகிறது. ஆனால் அசடனை யாரும் பயன் படுத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.

மேலும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவில், இந்த நாவலின் மூல நாவலுக்கு தலைப்பு அப்பாவி என்பது பொருத்தமாக இருக்கும் என்று ஒரு கருத்து இருப்பதாக சொல்கிறார்.
இதைப் பற்றியும் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

அன்புடன்
நாராயணசாமி.ம
புது தில்லி

அப்பாதுரை சொன்னது…

படிக்க ஆவலைத் தூண்டிவிட்டது. mnsamy கேள்வி சுவையானது. அசடன் என்பது தமிழ் வழக்கே தவிர வேர் வடமொழியோ என்று தோன்றுகிறது. உங்கள் பதிலை ஆவலுடன் படிக்கக் காத்திருக்கிறேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பு நண்பர்களுக்கு,
உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.
உண்மையில் நூல் முழுவதையும் மொழியாக்கம் செய்வதை விடவும் இந்தத் தலைப்புத்தான் எனக்கு அதிகச் சிக்கல் நிறைந்ததாகவும் சவாலானதாகவும் இருந்தது.அகராதியில் நாம் பார்க்கும்பொருள் வேறு;அந்தப் பாத்திரத்தின் இயல்புக்கு அது பொருந்திப்போவது வேறல்லவா.நாவலில் வரும் இடியட் மிஷ்கின் மூடனோ முட்டாளோ அல்ல.
மிகவும் நல்லியல்புகள் கொண்டவனாய்த் தீமை செய்வோரிடத்தும் நன்மையையே காண்பவன் அவன்.அதனாலேயே உலகத்தோடு ஒட்ட ஒழுகல் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை;அவன் அசடனாவது அந்த அடிப்படையிலேதான்.மேலும் தமிழில் முன்பு வெளிவந்த இந்நாவலின் சுருங்கிய-abridjed- மொழியாக்க வடிவத்தின் தலைப்பு அசடன் என்பதாக இருந்ததால் அதை அப்படியே எடுத்துக் கொண்டோம்.திரு ஜெயமோகனோடு இத் தலைப்புக் குறித்துத் தொலைபேசியில் உரையாடியபோது கிடைத்த தெளிவும் இத் தலைப்பை நோக்கியே நகரச் செய்தது.
எஸ்.ரா.அவர்கள் அப்பாவிஎன அந்தப்பாத்திரம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது மிகப்பொருத்தமானது;எனினும் இடியட் என்ற பதத்தின் மொழிபெயர்ப்பாக அமைய வேண்டுமென்பதால் அசடன்.
அசடு என்ற பொதுப் பதத்தின் சிறிய மாற்றம் அது..அவ்வளவே.

viki சொன்னது…

இன்றுதான் அசடன் முன்பதிவு செய்தேன்.வெறும் வார்த்தைகளால் நன்றி தெரிவிப்பதை காட்டிலும் இது சரியான வழியென தோன்றியது.நன்றி
இந்த நாவலை தமிழில் படிக்க ஆவலாய் தேடியபோது கிடைக்க வில்லை.ஆங்கிலத்தில் அவ்வளவு புலமை இல்லை.ஆகாவே இதை மிழிபெயர்த்த உங்களுக்கு நன்றி.உங்கள் பனி தொடரட்டும்.மேலும் தஸ்தாஎவ்ச்கியின் பல நூல்களை மொழி பெயர்க்கவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....