துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.1.11

ஒரு பட்டியல்

என் குட்டி நூலகத்துக்குள்(இது அல்ல..) நுழையும் தருணங்களிலெல்லாம் மலைப்புத் தட்டுகிறது...
ஏக்கம் மேலெழுந்து நெஞ்சைக் கவ்வுகிறது...
இவற்றையெல்லாம் என்று படித்து முடிப்போம் என நினைப்பதற்குள் மனதில் புதிய பட்டியல் தயாராகப் புதிய வரவுகள் வந்து சேர்ந்து விடுகின்றன.

ஓராண்டுக்கு எழுதுவதைச் சற்றே புறந்தள்ளி வாசிப்பை மட்டுமே வைத்துக் கொள்ளலாமோ என நினைக்கும் அளவுக்குக் குவிந்துள்ள நூல்களின் சேர்க்கை என்னைமிரட்டுகிறது..
என் ஆவலைக் கிளர்த்துகிறது.
‘’அறிதொறும் அறியாமை கண்டற்றால்..’’
என உள்நெஞ்சுக்குள் கோல் வைத்துக் கொண்டு வள்ளுவன் வேறு விரட்டிக் கொண்டிருக்கிறான்...
பசித்தவனின் பழங்கணக்குப் போல 2010இல் நான் படித்த நூல்களில்
மனதில் நின்ற ஒரு சிலவற்றின் பட்டியலை(மாதம் 1 வீதம் 12) மட்டும்..கீழே கொடுத்திருக்கிறேன்..
(அவை பற்றி எழுதியிருந்தால் அதற்கான இணைப்பையும் தந்திருக்கிறேன்)
இன்றைய காந்தி- ஜெயமோகன்(தமிழினி வெளியீடு)
நாவல்கோட்பாடு-ஜெயமோகன்(கிழக்குப்பதிப்பகம்)-
இந்நூல் பல ஆண்டுகளுக்கு முன்பே முதற்பதிப்பாக வந்திருந்தாலும்,கைக்குக் கிடைக்காமல் அலைக்கழித்து ஒரு வழியாகக் கிழக்குப்பதிப்பகத்தின் மறு வெளியீட்டால் இவ்வாண்டு படிக்கக் கிட்டியது.
புலிநகக்கொன்றை-பி.ஏ.கிருஷ்ணன்(காலச் சுவடு பதிப்பகம்)
வெட்டுப்புலி -தமிழ்மகன்(உயிர்மை பதிப்பகம்)
மௌனப்புயல்-வாஸந்தி(இந்திரா காந்தி கொலைப்பட்டபோது தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக மூண்ட கலவரம் பற்றியது)
அந்தக் கேள்விக்கு வயது 98-இரா.எட்வின்.-,நல்ல எழுத்து விதைகளைத் தொடர்ந்து தூவுவாரென்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் நண்பர் எட்வின் அனுப்பி வைத்த அருமையான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு..
(சாளரம்-வெளியீடு)
முள்-முத்துமீனாள்,(ஆழி பதிப்பகம், சென்னை)-எளிமையான ஒரு தன்வரலாற்றுநூல்
குழிவண்டுகளின் அரண்மனை-த.அரவிந்தன்,கவிதைகள்(அருந்தகைவெளியீடு)
ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்-ரகோத்தமன் (கிழக்கு பதிப்பகம்)
ஆ.மாதவனின் சிறுகதைகள்-(முத்துக்கள் 10 வரிசையில் அம்ருதா பதிப்பகம் வெளியிட்டது)
சாகா வரம்-இறையன்பு(கட்டுரையாளராக,பேச்சாளராக,நல்லியல்புகள் கொண்ட ஒரு மனிதராக ஏற்க முடியும் திரு இறையன்பை நாவலாசிரியராக ஏற்க முடியாமலிருப்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திய நாவல்)
ஆங்கிலத்தில்;
AMEN,
THE AUTOBIOGRAPHY OF A NUN,
SISTER JESMIE,

PENGUIN BOOKS

2 கருத்துகள் :

suneel krishnan சொன்னது…

இந்த பட்டியலில் நான் வாசித்தது இன்றைய காந்தி மட்டுமே ,அதை தவிர வெட்டு புலி இம்முறை வாங்கி வைத்துள்ளேன் ,இனி தான் தொடங்க வேண்டும் அம்மா

சித்திரவீதிக்காரன் சொன்னது…

தங்கள் பட்டியலில் இருந்த புத்தகங்களுள் 'ஆமென்' மட்டும் தமிழில் வாசித்திருக்கிறேன். மற்றவைகளையெல்லாம் இனிதான் வாசிக்க வேண்டும். வாசிப்பு ஒரு வலை போல இழுத்துக்கொண்டேயிருக்கிறது. காவல்கோட்டம் போன்ற பெரிய நாவல் ஒன்று வாசித்துக்கொண்டிருக்கும்போது நேற்று ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்' நாவல்களையும் சேர்த்து வாசிக்க எடுத்திருக்கிறேன். வருடத்திற்கு 50 முக்கியமான புத்தகங்களாவது வாசித்துவிடவேண்டுமென்று இருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....