துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.1.11

அசோகமித்திரனுக்கு ‘சாரல்’விருது

இன்றைய சூழலில் திரைப்படம் மற்றும் பிற ஊடகத் துறைகள் தமிழ் இலக்கியத்தின்பால் உண்மையான ஆர்வத்துடன் நெருங்கி வந்து கொண்டிருப்பது ஒரு ஆரோக்கியமான போக்கு.
நல்ல இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கும்,
இலக்கியங்களின் பாதிப்புக்களால் நல்ல படங்கள் உருவாவதற்கும் இப்போக்கு பெரிதும் உதவக்கூடும்.
அந்த வரிசையில் தங்கள் கல்லூரிக் காலத்திலிருந்தே இலக்கியப் பிடிப்புக் கொண்டவர்களான இயக்குந இரட்டையர்கள் ஜேடி-ஜெர்ரி ஆகிய இருவரும் தங்கள் தந்தையரின் பெயரை ஒருங்கிணைத்து அமைத்திருக்கும்

ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளை 

2009 ஆம் ஆண்டு தொடங்கி,ஒவ்வோரு வருடமும் தமிழ் இலக்கியத் துறையில் முத்திரை பதித்திருக்கும் படைப்பாளிகளுக்கு 
சாரல் விருது என்கிற பெயரில் ஆண்டுதோறும் 
ரூ 50,000/ - ( ஐம்பதாயிரம் ரூபாய்) பரிசுத்தொகை அடங்கிய விருதை வழங்கி வருகிறது.

 இவ்வாண்டு-2011-க்கான சாரல் விருது முது பெரும் எழுத்தாளர் 
அசோகமித்திரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எழுத்தாளர்கள் ரவிசுப்ரமணியன்,தேனுகா,மா.அரங்கநாதன் ஆகிய மூவரும் நடுவர்களாகச் செயல்பட்டு அசோகமித்திரனையும் இவ்விருதின் தகுதியையும் ஒரு சேரப் பெருமைப்படுத்தி உள்ளார்கள்.அவர்களுக்கு நன்றி.
.
மிக லகுவாக...அனாயாசமாக...யதார்த்தத்தின் சுருதி பிசகாமல் கலையின் உன்னத உச்சங்களையும்,மானுட தரிசனங்களையும் நோக்கி .இட்டுச் செல்லக்கூடியவை அசோகமித்திரனின் எழுத்துக்கள் என்பதைத் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் பரிச்சயமும் உள்ள எவரும் தவற விட்டு விட முடியாது
திரு அசோகமித்திரன் அவர்களுக்கு வணக்கமும்,வாழ்த்தும்.

9/1/11 ஞாயிறு மாலை பிலிம் சேம்பரில் நிகழும் விருதளிப்பு விழாவில் 
ஜேடி-ஜெர்ரியின் கலம்காரி நூல் வெளியீடும்,
கலம்காரி ஆவணப்படத் -http://www.youtube.com/watch?v=n6SChMDZPrY&feature=player_embedded-திரையிடலும் நிகழவிருக்கின்றன.

நினைவுச்
சிற்பம்

சாரல் விருது வழங்கும் விழாவும்
ஜேடி ஜெர்ரியின் கலம்காரி நூல் வெளியீட்டு விழாவும்


09- 01- 2011 - ஞாயிற்றுக்கிழமை
மாலை - 6 00 மணி
இடம் - பிலிம்சேம்பர் ,சென்னை.

பங்கேற்போர்
பிரபஞ்சன் | ஆர். பி. பாஸ்கரன் | எம்பெருமாள் | ச தமிழ்செல்வன் | பாரதிமணி | இயக்குனர் லிங்குசாமி
அன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம்திரையிடப்படும்

பி.கு;தகவல் தந்து உதவிய நண்பர் ரவிசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி..

அசோகமித்திரனின் சில படைப்புக்கள்;
நாவல்கள்;
தண்ணீர்,
கரைந்த நிழல்கள்,
18ஆவது அட்சக்கோடு
ஒற்றன்
ஆகாசத் தாமரை
மானசரோவர்
குறுநாவல்கள்;
இருவர்
விடுதலை
சிறுகதைகள்;
அசோகமித்திரனின் 187 சிறுகதைகளை இரு பாகங்களாகத் தொகுத்து சென்னை,கவிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.


கூடுதலாக ஒரு தகவல்;
இது வரை..சாரல் விருதுபெற்றோர்..- 2009 திலீப்குமார்
                                                                                  2010 ஞானக்கூத்தன்
  



4 கருத்துகள் :

இளங்கோ சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள் அம்மா..

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

பாரதி மணி சொன்னது…

சுசீலாம்மா! நான் அசோகமித்திரன் விழாவில் அந்த மாபெரும் எழுத்தாளரின் கான்வாஸில் என்னைப்பற்றியும் கொஞ்சம் வரைந்துகொண்டேன்.

லிங்க் கீழே:

http://www.facebook.com/notes/bharati-mani/acokamittiranukku-caral-virutu/485637076713

முடிந்தபோது படித்துப்பார்க்கவும்.

பாரதி மணி

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிக்க மகிழ்ச்சி பாரதி மணி சார்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....