துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.12.11

மொழிபெயர்ப்பென்னும் சவால்..


''ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்.இச் சவால் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு இடம் பெயரும்போது பேருருவம் கொள்கிறது.அடிப்படையான கலாசார இடைவெளிதான் இதற்கான இயங்கு காரணி’’

’’மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் படைப்பில் மொழிபெயர்ப்பாளனுக்கு ரசனை கலந்த ஈடுபாடு வேண்டும். 
It should be a labour of love. 
மூலப் படைப்பாளியின் படைப்பாளுமை குறித்த பொருளார்ந்த பிரக்ஞையும் புரிதலும் கூடுதல் சிறப்பு....''

-ஜெயகாந்தனின் படைப்புக்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின்’இலக்கிய ஆளுமைகள்’என்னும் நூலிலிருந்து

13.12.11

’அசட’னின் வருகை...

அக்டோபர் மாதமே வரக் கூடுமென எதிர்பார்ப்புக்கள் இருந்தபோதும் பதிப்புப் பணியில் நேரிட்ட ஒரு சில நடைமுறைச் சிக்கல்களால் சற்றுத் தாமதமான ‘அசட’னின் வெளியீடு இப்போது நிகழ்ந்து நூலும் வெளிவந்து விட்டது. நடப்பாண்டுக்குள் அந்த வெளியீடு சாத்தியமாக முடிந்ததில் மகிழ்ச்சி.

மதுரை பாரதி புத்தக நிலையம் வெளிட்டிருக்கும் இந்த மொழியாக்க நாவலை வாங்க எண்ணுவோரும்,முன்னமே முன் பதிவு செய்து கொண்டவர்களும் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001
"durai pandi pandi" <bharathibooks@yahoo.co.in>

பதிப்பாளரிடமிருந்து நூலின் பிரதிகள் போதிய அளவு அனுப்பி வைக்கப்பட்டபின்பு,ஆன்லைன் வழி உடுமலை.காமில் பதிவு செய்து கொண்டவர்களுக்குப் பிரதிகள் கிடைக்கும்.

நூலின் பிரதிகள் எழுத்தாளர்கள் திரு ஜெயமோகன்,மற்றும் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும்  அவர்கள் மின்னஞ்சல் வழி எனக்கு அளித்த வாழ்த்துச் செய்திகள்...

திரு ஜெயமோகன்;
அன்புள்ள சுசீலா
அசடன் நாவல் நேற்று கூரியரில் வந்தது. சிறப்பான கட்டமைப்பு. பிரம்மாண்டமாக இருக்கிறது. 
வாழ்த்துக்கள்

திரு எஸ்.ராமகிருஷ்ணன்
அன்பு சுசீலா அம்மா அவர்களுக்கு
அசடன் நூல் கிடைத்தது, மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, உங்களின் அயராத மொழியாக்கப்பணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்
மிக்க அன்புடன்
எஸ்ரா


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....