துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.10.12

என் கதைகள் ஆங்கிலத்தில்..

நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு இன்னொரு மொழியில் உரு மாறி வருகையில் -அதிலும் அப்படைப்பின் ஜீவனும் வீரியமும் குறையாத சொற்களில் அது முன் வைக்கப்படுகையில் ஏற்படும் பரவசக்கிளர்ச்சி சொல்லில் அடங்காதது. அதிலும் அவ்வாறு அதை மொழிபெயர்க்கும் நபர்  நம் மனதின் அலைவரிசையை மிகத் துல்லியமாக உள்வாங்கிக் கொள்ளக்கூடியவராக அமைந்து விட்டால் நாம் கற்பனை செய்திருக்கும் மூலப்பொருளை அவர்களால் இன்னொரு மொழியில் மிக எளிதாகக் காட்சிப்படுத்தி விட முடியும்.


என் சிறுகதைகள் சில அப்படிப்பட்ட ஒரு பேறு பெறவிருக்கின்றன. என் ‘தேவந்தி’ தொகுப்பிலுள்ள பத்து சிறுகதைகளை மதுரை பாத்திமாக்கல்லூரியின் ஆங்கிலப்பேராசிரியர் டாக்டர் கீதா அவர்கள் [பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுத் திட்டத்துக்காக]மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார்கள்.அக்கதைகளில் சில  http://www.classicsintamil.com/என்னும் அவர்களது ஆய்வுத் திட்டத் தளத்தில் வலையேற்றமும் செய்யப்பட்டுள்ளன.

புதிய பிரவேசங்கள்-
http://www.classicsintamil.com/index.php?option=com_tpshowcase&view=list&layout=&id=62

சாத்திரம் அன்று சதி-
http://www.classicsintamil.com/index.php?option=com_tpshowcase&view=list&layout=&id=96

அவற்றை வாசிக்கையில் நானே ஆங்கிலத்தில் செய்திருந்தால் கூட மூலத்துக்கு மிக நெருக்கமாக-இத்தனை சிறப்பாகச் செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.ஆய்வுத் திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்தி வரும் பேராசிரியர்களுக்கும்,குறிப்பாக கீதாவுக்கும்[அவர் என் முன்னாள் மாணவியும் கூட]என் நன்றி..

கூடிய விரைவிலேயே இந்த மொழியாக்கக்கதைகளைத் தொகுப்பாக வெளியிடும் திட்டமும் இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய மற்றொரு செய்தி.


2 கருத்துகள் :

Unknown சொன்னது…

Congrats

NARAYAN சொன்னது…

வாழ்த்துகள் அம்மா.
இது போன்ற மொழிபெயர்ப்பு மூலம் தங்கள் படைப்புக்கள் மேலும் பல வாசகர்களை சென்றடையும் என்பதில் ஐயமில்லை.
மொழிபெயர்ப்பு ஒரு கலை. சில வேளைகளில் மொழிபெயர்ப்பு மூலத்தையே விஞ்சி விடுகின்றது.
அதுவும் மொழிபெயர்ப்பாளர் மூலப்படைப்பின் செறிவை உணர்ந்து, அவருடைய பார்வையில் மேலும் சில கருத்துக்களை சேர்க்கும் போது அது மூலப்படைப்புக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.
தங்களுடைய சிறுகதையை மொழிபெயர்த்தவருக்கும் எனது வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....