துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.12.10

’’மானிடவர்க்கென்று பேச்சுப்படில்...’’


இணைய வாசகர்களுக்குப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ஒரு சிறுகதையும் கூடவே...
(ஆண்டாள் குறித்த மரபு ரீதியான கதையின் மீட்டுருவாக்கம் இம்முயற்சி)

’’மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர்’’க் கோயிலின் கண்டாமணி அங்கே உச்சிக்கால வழிபாடு நடந்தேறுவதற்கு அறிகுறியாக நாத வெள்ளமாகப் பல முறை முழங்கி ஓய்கிறது. அதன் ஒலி முழக்கம் ஓய்ந்த பின்னரும் கூடப்

28.12.10

தமிழ்/2010-ஒரு கடிதமும் சில பார்வைகளும்

தில்லி தமிழ்ச்சங்கத்தில் டிச.10.11,12 நடந்து முடிந்த தமிழ்2010 கருத்தரங்கிற்குப் பின்பு தில்லி நண்பரும் பதிவருமான திரு கலாநேசன் கீழ்க்காணும் கடிதத்தை அனுப்பியிருந்தார்.
.............................................................................
வணக்கம் அம்மா,
இன்று நீங்கள் நெறியாளுகை செய்த கருத்தரங்கில் கலந்துகொண்டதில்

24.12.10

விருதுக்கு வாழ்த்து


ஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த 
திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச் ‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது
அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது.

13.12.10

தில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு-3

ஓர் அரசமைப்பாலும் பல்கலக்கழகத்தாலும் மட்டுமே நிகழ்த்துதல் சாத்தியமான நவீன தமிழ் இலக்கியக் கருத்தரங்கை - இன்றைய இலக்கியத்தின் போக்கை அவதானிக்கும் தீவிரத் தன்மை கொண்ட ஏழு அமர்வுகளைக் கொண்டு மிகச் சிறப்பாக நடத்திக்காட்டித் தமிழின் பலதுறை சார்ந்த மிகச்சிறந்தபடைப்பாளிகள்,விமரிசகர்கள்,சிந்தனையாளர்கள் ஆகிய பலரை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துத் தனது நெடிய வரலாற்றில் புதியதொரு சாதனையைப் படைத்திருக்கிறது தில்லி தமிழ்ச்சங்கம்

11.12.10

அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்

’உண்மையின்அழகு பொதிந்த ஓர் ஆன்மாவை சிருஷ்டிப்பதே என் நோக்கம்’’எனக் குறிப்பிடும் தஸ்தாயெவ்ஸ்கி அந்த எண்ணத்துடன் உருவாக்கியுள்ள ஆக்கமே இடியட்/அசடன்.(The Idiot)

 குற்றமும் தண்டனையும் நாவலை விடவும் அளவில் பெரியதாக
 நான்கு பாகங்களைக் கொண்டிருக்கும் இந்த நாவலைக்
கொடிய வறுமை,இடைவிடாச்சூதாட்டம்,முதற்குழந்தையின் மரணம் முதலிய சொந்த வாழ்க்கைச்சிக்கல்களுக்கு நடுவிலிருந்து கொண்டு,அவற்றோடு போராடியபடி

9.12.10

தில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு 2


(இன்று 10.12.10 தொடங்கும் 
தில்லி தமிழ்ச்சங்க - தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு நிகழ்வில் -முந்தைய அழைப்பிதழிலிருந்து ஒரு சிறிய மாற்றம்

5.12.10

’உன்னை விட்டால் யாருமில்லை..’

சங்க இலக்கியத்தைப் பொறுத்த வரை தோழியின் பாத்திரம் என்பது ,
ஒரு இலக்கிய மரபாக...
தலைவியால் வெளியிட முடியாத உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் ஒரு வடிகாலைப் போலவே

3.12.10

நெறியாளுகை ,புனைவிலக்கியம்-விளக்கம்

அன்புள்ள அம்மா,
தில்லி தமிழ்ச் சங்கத்தின்  கருத்தரங்கத்தில்    தாங்களும் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. 
வாழ்த்துக்கள்
எனது சிறிய இரு சந்தேகங்களைத் தெரிவிக்கிறேன்.
௧)கருத்தரங்கத்தில்  தங்களுடைய பணி நெறியாளுகை.  
தொகுத்து  வழங்குதலுக்கும் நெறியாளுகைக்கும் என்ன வேறுபாடு. .
௨)புனைவிலக்கியம்  என்றால் என்ன? 
    விளக்கவும்
அன்புடன்
நாராயணசாமி.ம 
புது தில்லி 
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
எம்.ஏ.சுசீலா
அன்பிற்குரிய திரு நாராயணசாமி அவர்களுக்கு,
தங்கள் வினா தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்தவிருக்கும் 
இலக்கியக் கருத்தரங்கம் தொடர்பாக உள்ளதால் தங்கள் வினாக்களை , என் தளத்தில் புதிதாகத் தொடங்கியுள்ள இலக்கிய உரையாடல் என்னும் பகுதியின் முதல் உரையாடலாகக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.அந்த வாய்ப்பைத் தாங்கள் ஏற்படுத்தித் தந்ததில் மகிழ்ச்சி.
1.தொகுத்து  வழங்குதல்-நெறியாளுகை வேறுபாடு
Moderation என்னும் ஆங்கிலச் சொல்லையே நெறியாளுகை எனத் தமிழாக்கியுள்ளோம்.
கருத்தரங்கம் என்பது தொகுத்து வழங்கும் ஒரு கூட்டம் அல்லது நிகழ்வு அல்ல;அதற்கு மேலான சற்றுத் தீவிரத் தன்மை அதற்கு உண்டு.கருத்தரங்கில் பங்கேற்றுக் கட்டுரை வாசிப்போரின் ஆளுமை பற்றிய தெளிவு,புரிதல் இவற்றோடு,அவர்களது கட்டுரைகள் சார்ந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களை/அல்லது அந்தக் கட்டுரை தொடர்பான மேலும் சில கருத்துக்களையும் கூறும் உரிமையும்,பார்வையாளர்களிடமிருந்து எழும் விவாதங்களையும்,கேள்விகளையும் - அத்தகைய வாதங்களின் போக்கு - மையக் கருத்துக்கு மாறாகத் திசைதிரும்பிச் சென்றுவிடாமல் நெறிப்படுத்திக் கொண்டு செல்லும் பொறுப்பும் நெறியாளும் நபருக்கு உண்டு. 
கருத்தரங்கை நெறிப்படுத்துபவர் குறிப்பிட்ட துறையில் கொஞ்சமாவது பரிச்சயமும்,தேர்ச்சியும் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதே தொகுப்பாளரையும்,நெறியாளுபவரையும் வேறுபடுத்தும் மற்றொரு முக்கியமான அம்சம்.

நாடகம்,திரைப்படம் முதலிய ஊடகங்களில் அனைத்தையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் முழுப் பொறுப்பும் இயக்குநர் வசத்திலேயே இருப்பதால் சில நாடக,திரைப்பட இயக்குநர்கள் ,இயக்கம் என்பதற்கு மாறாக நெறியாளுகை என்று குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டு.
பி.கு;இறுதியாக..இதைச் சொல்ல வேண்டாமென்று நினைத்தாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை.
பட்டிமன்றம்,வழக்காடு மன்றம் போன்றவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்களின் போக்கையும் கூட நடுவர்கள் கிட்டத்தட்ட இந்த முறையிலேதான் சமன் செய்து கொண்டு போக வேண்டுமென்றாலும், (50.60களில் அப்படித்தான் இருந்தது)
இன்றைய இலக்கியச் சூழலில் அவ்வாறு நடைபெறாமல் அவை நீர்த்துப் போய்க் கேலிக் கூத்துக்களாகிவிட்டதால் அங்கே பயன்படும் நடுவர் என்னும் சொல் இங்கே கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 
மற்றும் ஒன்று..
தொகுப்பாளர் என்கிற கலாச்சாரமே தொலைக்காட்சி போன்ற ஊடகங்களால் பரவலாக்கப்பட்டு - இலக்கியக்கூட்டங்கள் வரை.-..அண்மையில்,புதிதாக வந்து சேர்ந்த ஒன்றுதான். 
அதற்கு முன்பு வரையில் குறிப்பிட்ட கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர்களே அடுத்தடுத்துப் பேச இருப்பவர்களை ஒருங்கிணைத்து நடத்தும் பணியையும் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார்கள்.
இன்று...தொகுப்பாளர்களுக்குத் திறமை இருக்கிறதோ,இல்லையோ தோற்ற,நடை உடை பாவனைகள் கவர்ச்சிகரமாக இருந்தால் போதும் என்ற அளவுக்குச் சில இடங்களில் நிலைமை கீழிறங்கிக் கிடக்கிறது.
2.புனைவிலக்கியம் பற்றி...
புனைவு என்பது கற்பனை.
நடந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கட்டுரைகளைத் தவிரக் கற்பனையான புனைவுகளால் உருவாகும் நாவல்,சிறுகதை,கவிதை ஆகிய அனைத்தும் புனைவிலக்கியங்களே.புனையப்படும் இலக்கியமே புனைவிலக்கியம்.
இன்னும் ஒன்று..
புனையப்படும் எல்லாமே புனைவிலக்கியமாக ஆகிவிடுவதுமில்லை.
புனையப்படும் எழுத்தில்,மெய்யான இலக்கியத் தகுதிகள்,அழகியல்கூறுகள்,உள்ளடக்கச்செறிவு ஆகியவைகளும் உடன் இணையும்போதுதான் புனைவிலக்கியம் என்ற உண்மையான தகுதிப்பாட்டுக்கு அது உரியதாகிறது.





கடிதமும்,எதிர்வினையும்

மதிப்பிற்குரிய சுசீலா:
உங்கள் பதிவை அவ்வப்போது வந்து ஆவலோடு படிப்பேன்.  அந்த வகையில், நீங்கள் அறிவித்திருக்கும் இரண்டு மாற்றங்கள் பற்றிய என் கருத்து இது
1. இலக்கிய உரையாடல் செவிக்கும் அறிவுக்கும் சிறிதீயும் அருமையான திட்டம்.  எனினும் அதைக் கடிதம் மூலமாகச் செயல்படுத்த எண்ணியிருப்பது நடைமுறைச் சிக்கல்.  உங்களுக்கும் எனக்கும் (எங்களுக்கும்?). இணையத்தின் சிறப்பே அதன் சிறகுகள் தானே?  இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா? உங்கள் தளம் உங்கள் மனம் - ஒப்புக்கொள்கிறேன்; இருந்தாலும் அறிவு நாலிடத்திற்கு சென்றடைய வேண்டும், இலக்கிய இன்பம் தொட்டனைத்தூறும் மணற்கேணித் தன்மையது என்று நம்பினால் பொதுவில் வையுங்கள்.  பகிர்வோருக்கும் எளிமையாக இருக்கும்.  இதனால் சில அறிவுக்குருடர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் - நாளடைவில் குறைந்து விடும்.  இதைக் கேள்வி பதில் தளமாக்குங்கள்.  கூடவே கருத்துப் பரிமாறவும் இடங்கொடுங்கள்.

2. பின்னூட்டத்துக்கும் கடிதமா?  பின்னோக்கிப் போகிறீர்களே என்று உரிமையுடன் கேட்கலாமா? ஒரு வரிக்கருத்துகளின் வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் அவை வாசகர்களின் வாழ்த்துக்கள் தானே?  விருப்பமில்லையென்றால் நீக்கிவிட உங்களுக்கு வசதியுண்டே?

இணையக் கலாசாரத்தின் அடிப்படையே தடையில்லாத உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் தானே?  கருத்தையும் கோப்பையும் பொறுத்து உங்கள் தளத்தில் பரிமாற்றமும் முதிருமே?

அன்புடன்
 -அப்பாதுரை
http://moonramsuzhi.blogspot.com/
http://nasivenba.blogspot.com/
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எம்.ஏ.சுசீலா..
அன்பான வலை நட்புக்களுக்கு,
எனது வலையில் நான் மேற்கொள்ளத் தொடங்கிய இரு மாற்றங்கள் பற்றி வந்த இந்தக் கடிதமும்,சென்ற பதிவில் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டிருந்த சில செய்திகளும் நண்பர்களுடனான உரையாடல்களும் இவற்றை மறு பரிசீலனை செய்வது நல்லது எனச்சற்று யோசிக்க வைத்திருக்கின்றன.
//இணையக் கலாசாரத்தின் அடிப்படையே தடையில்லாத உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் தானே? //
//இணையத்தின் சிறப்பே அதன் சிறகுகள் தானே?  இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா?//
என்று திரு அப்பாதுரை எழுப்பும்கேள்வி மிக நியாயமானதுதான்.
நான் ஒரு சோதனை முயற்சியாகவே முதலில் இதை எண்ணினேன்.
வாசகர்களின் கருத்துப் பகிர்வுக்கும் தடையற்ற உடனடிக் 
கருத்துப் பரிமாற்றத்துக்கும் இதனால் சிரமம் ஏற்படும் என்றால் - உடனடி எதிர்வினைகளைப் பெறுவதில் தடை விளையும் என்றால் 
கருத்துரைப் படிவங்களை/பின்னூட்டங்களை  
மீண்டும் மகிழ்வோடு திறந்து வைப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

கருத்துரைப் பெட்டியின் கொள்ளளவுக்குள் அடங்காத கடிதங்களை மட்டும் தனியே வெளியிடுகிறேன்.
எனவே கருத்துரைகளுக்கு மாறாகக்கடிதங்கள் என்பதை மாற்றிக்
கருத்துரைகள்,கடிதங்கள்
என இரண்டுமேஏற்கப்படும் எனத் திருத்திக் கொள்கிறேன்.
இலக்கிய உரையாடல் பகுதி அப்படியே இருக்கட்டும்.அதன் வழி எதைக் கேட்க வாசகர்கள் நினைக்கிறார்களோ அதைக் கேட்கட்டும்.இலக்கியம் தொடர்பான விளக்கங்களை..தகவல்களைப்பெற அது ஒரு வாயிலாக இருந்தால் பதிவுகளின் விறுவிறுப்பும் சுவையும் கூடும் என எதிர்பார்க்கிறேன்.



1.12.10

இரு மாற்றங்கள்;கடிதங்கள்

என் வலைத் தளத்தில் செய்துள்ள இரு மாற்றங்கள் குறித்த எதிர்வினைக் கடிதங்களும் அவற்றுக்கான என் விளக்கமும்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
நல்ல முயற்சி. விவாதங்கள் மூலம் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ முடியும். எழுத்தாளர் ஜெயமோகன் இதைச் செவ்வனே செய்துவருகிறார். வாசகர்களின் இலக்கிய சந்தேகங்கள் தீர்த்து வைப்பதன் மூலம் பலருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆரம்பகட்டமாக பரஸ்பர பகிர்தல் நடைபெறும். உங்கள் இலக்கியப் பணிக்கு வாழ்த்துக்கள்.
-தமிழ்மகன்.

நல்ல முயற்சி. 
வலைப்பதிவுகளைப் பொழுது போக்குக்காகப் படிப்பவர்கள், இலக்கிய ஆர்வமோ / சந்தேகங்களோ கொண்டவர்களாக இருப்பார்களா என்கிற சிறிய சந்தேகம் எங்கள் மனதில் இருக்கின்றது.
அப்படி இல்லாமல், எல்லோரும் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் பல நன்மைகள் விளைய சந்தர்ப்பம் உள்ளது. எங்கள் பதிவுகளில் நீங்கள் காணும் பிழைகள் எது இருந்தாலும், அவற்றை நீங்கள், தயங்காது எங்கள் மின்னஞ்சலுக்கு பிழைகளையும், திருத்தங்களையும் எடுத்துரைக்கலாம், நாங்கள் அதை நிச்சயம் மதித்து, பின்பற்றுவோம். 
அன்புடன்,
க கோ கௌதமன்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
எம்.ஏ.சுசீலா
முயற்சிக்கு வாழ்த்துக் கூறிய திரு தமிழ்மகன்,மற்றும் நண்பர் கௌதமன் ஆகியோருக்கு நன்றி.
வலைப் பதிவை வெறும் பொழுதுபோக்காக ஆக்கி விடாமல் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரு சோதனை முயற்சிதான் இது. கௌதமன் தெரிவித்த ஐயங்கள் எனக்கும் உண்டு;எனினும் இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு சில வாசகர்களாவது இந்த முயற்சிக்குக்கை கொடுப்பார்கள் என்றநம்பிக்கையும் ஒரு புறம் இருந்து கொண்டுதானிருக்கிறது.காலம் என்ன சொல்கிறது..பார்ப்போம்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

மாற்றங்களைக் கண்ணுற்றேன் அம்மா. இந்த மாற்றங்களின் தாக்கம் வாசகர்களிடம் ஏற்பட நீண்ட நாட்களாகும். ஜெயமோகன் தளத்தில் வாசகர்கள் பின்னூட்டம், அதன் மீது அவர் பதில் என்பது ஒருவிதமாகவும், வேறு சில எழுத்தாளர்களுடைய தளத்தில் வேறுவிதமாகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்..

முதல் மாற்றமாக நீங்கள் அறிவித்திருக்கிற இலக்கிய உரையாடல் என்பது பதிவுகளில் தொடர்ந்து நடக்கக் கூடியது அல்ல. அது குழுமங்கள்,  புல்லட்டின் போர்ட் மாதிரி தனி இழைகளாகக் கொண்டு போகக் கூடிய வசதி இருந்தால் தான் சாத்தியம், எடுத்துக் காட்டாக திரு பென்னேஸ்வரன் கூட சமீபத்தில் தமிழ்வாசல் என்று கூகிள் குழுமம் ஒன்றைத் துவங்கி இருப்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்து, பின்னூட்டங்கள் குறித்த மாற்றம்! இது கூட மட்டுறுத்தல் வசதியை நீங்கள் எப்படிப் பயன் படுத்துகிறீர்கள்  என்பதைப் பொறுத்ததே. ஒற்றை வரியோ, அல்லது ரிப்பீட்டே  என்பது மாதிரி வருகிற பின்னூட்டங்கள், நமக்கு எப்படிப் பட்ட வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு அளவுகோல், அவ்வளவுதான்! இதைக் கூட அதிகமாகப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து. நம்முடைய எழுத்தில், என்ன எழுதுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் மட்டுமே போதுமானது. நீங்கள் ஒரு புத்தக ஆசிரியராகவும் இருப்பதால், உங்களுடைய படைப்புக்களை மார்கெடிங் செய்ய தளத்தில் இந்த மாற்றங்கள் மட்டுமே போதாது. டாட் காம் என்று தனியாக தளம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், தளத்தில் வேறு சில வசதிகளையும் செய்ய வேண்டி இருக்கும். Wordpress  தள தீம்கள், நிறைய வசதிகளுடன் கிடைக்கின்றன. வண்ணம் முதல், உள்ளடக்கம், உங்களைப் பற்றிய வேறு விவரங்கள், எழுதிய புத்தகங்களின் குறிப்பிட்டபகுதிகளை தளத்திலேயே படிக்கும் வசதி இப்படி நிறைய மாற்றங்களைப் படிப்படியாக அதில் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இது என்னுடைய இரண்டு பைசே.
அன்புடன்
கிருஷ்ண மூர்த்தி

எம்.ஏ.சுசீலா
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி.இது இப்போதைக்குஒரு சோதனை மட்டுமே.
தமிழ் இலக்கியத்தில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் 36 ஆண்டுக்காலம் ஆசிரியராகப் பணியாற்றியதாலும்,படைப்பிலக்கியத் துறையில் கொண்ட நாட்டத்தினாலும் எனக்குத் தெரிந்திருக்கும் - மற்றும் என் சேமிப்பிலிருக்கும் ஓரளவு தகவல்களைத் தேவைப்படும் நபர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வமே இந்த அடியை நான் எடுத்துவைக்கக் காரணம்..
வாசகர்களிடம் இதன் தாக்கம் ஏற்பட நாளாகும் என்பதையும்,அவ்வப்போது படித்து விட்டுப் போகும் பதிவுகளில் தொடர்ந்த செயல்பாடு சற்றுக்கடினமானதாகத்தான் இருக்கும் என்பது எனக்கும் தெரிகிறது.
இருந்தாலும் அத்தகைய ஆர்வமுள்ள வாசக வரவுக்காகக் காத்திருப்பதில்பிழையில்லையே.
அத்தகையோர் வரும் வரை பிற பக்கங்களை என் போக்கில் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.
தங்கள் உடன் பதிலுக்கு நன்றி.

பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட......

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....